#image_title
ஹாலிவுட் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் நடிகை தமன்னா அணிந்திருந்த உடை பலரின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது.
நடிகை தமன்னா: இந்திய சினிமாவிலேயே மிகவும் அழகான நடிகையாக இருப்பவர் நடிகை தமன்னா. மும்பை மாநிலம் மகாராஷ்டிராவில் பிறந்த தமன்னா வளர்ந்தது எல்லாம் மும்பையில் தான். வைர வியாபாரியின் மகளான தமன்னாவிற்கு இந்தி படங்களில் நடிக்கும் வாய்ப்பு முதலில் கிடைத்தது. இருப்பினும் தெலுங்கில் ஸ்ரீ என்ற திரைப்படத்தின் மூலமாக மிகப் பிரபலமானார்.
தமிழ் படங்கள்: தமிழில் கேடி என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் அதை தொடர்ந்து வியாபாரி, கல்லூரி போன்ற படங்களில் நடித்திருந்தார். இருப்பினும் அந்த அளவுக்கு புகழை பெற முடியவில்லை. பின்னர் தனுசு உடன் படிக்காதவன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டு கொடுத்த காரணத்தால் தமன்னாவின் மார்க்கெட் உயர்ந்தது.
இதையும் படிங்க: Amaran: அமரன் படத்திற்கு முன்னாள் ராணுவ அதிகாரி குற்றச்சாட்டு… நெத்தியடி பதிலால் தந்த இயக்குனர்
பின்னர் தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா, கார்த்திக், தனுஷ் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துவிட்டார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். தற்போது தமிழ், தெலுங்கு தாண்டி பாலிவுட் சினிமாவில் பிஸியான நடிகையாக இருந்து வருகின்றார்.
விஜய் வர்மாவுடன் காதல்: 35 வயதான நிலையிலும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நடிகை தமன்னா சமீப நாட்களாக பாலிவுட் பிரபலமான விஜய் வர்மாவுடன் காதலில் இருந்து வருகின்றார். எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் அவருடன் ஜோடியாக சென்று வருகின்றார். தமிழ் சினிமாவில் நீண்ட நாட்கள் தலை காட்டாமல் இருந்த நடிகை தமன்னா சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருப்பார்.
அதைத் தொடர்ந்து அரண்மனை 4 திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருந்தார். தற்போது தனது கைவசம் ஒரு ஹிந்தி திரைப்படமும், ஒரு தெலுங்கு திரைப்படமும் வைத்திருக்கின்றார். சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய நடிகை தமன்னா எப்போதும் கிளாமருக்கு பஞ்சம் வைத்ததே கிடையாது.
இதையும் படிங்க: Srikanth: உன்னாலதான் எனக்கு டைம் வேஸ்ட்?!… விஜயிடம் திட்டு வாங்கிய ஸ்ரீகாந்த்… நண்பன் படத்தில் நடந்த சுவாரஸ்யம்!…
கிளாமர் உடை: போட்டோ சூட் மட்டுமல்லாமல் பொது நிகழ்ச்சிகளுக்கும் மிக கிளாமரான உடையில் தான் காட்சியளிப்பார். அந்த வகையில் தற்போது ஹாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் வித்தியாசமான உடையில் ஒரு பட நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்திருக்கின்றார். இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பலரும் தமன்னாவுக்கு பாலிவுட்டில் எல்லாம் காம்படிஷனே இல்லை டைரக்டாக ஹாலிவுட் தான் என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.
TVK Vijay:…
TVK Vijay:…
தமிழக வெற்றிக்…
TVK Vijay:…
Vijay TVK:…