Connect with us

Cinema News

ஊத்திக்கொடுத்த முதல் புருஷன்… குடியால் கெட்ட வாழ்க்கை… மனம் திறக்கும் ஊர்வசி..!

80ஸ் மற்றும் 90ஸ்களில் தன்னுடைய வெகுளியான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை ஊர்வசி. அவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களிலுமே அலட்டல் இல்லாமல் கலகலப்பாக நடித்து இருப்பார். ஆனால் ஊர்வசியின் வாழ்க்கையில் சோகமே அதிகமாக இருந்து இருக்கிறது.

நாடக நடிகர்களாக இருந்த பெற்றோர்களுக்கு பிறக்கும் மூன்று மகள்களுக்கும் ஜீனில் இருந்த நடிப்பு இவர்களுக்கும் தொற்றிக்கொள்ள மலையாளத்தில் கலரஞ்சினி, கல்பனா மற்றும் ஊர்வசி பெரிய நடிகைகளாக திகழ்கிறார்கள். முதலில், எதேர்ச்சையாக கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டார் ஊர்வசி. ​​இயக்குனர் கே.பாக்யராஜ் இயக்கத்தில் உருவான கிராமத்தை அடிப்படையாகக் கொண்ட முந்தானை முடிச்சு படத்தில் நடித்தார். இப்படம் நல்ல வரவேற்பினை பெற்று பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் ஹிட்டானது.

இதையும் படிங்க : பலே ஆளு சார் நீங்க… இருவர் படத்துக்கு ஐஸ் கால்ஷூட்டுக்கு அலட்டிக்காத மணிரத்னம்…

இதனால் ஊர்வசியால் தொடர்ச்சியாக படிக்கமுடியாமல் போகிறது. அதற்கு நேரெதிராக சினிமாவில் வாய்ப்புகள் குவிகிறது. தமிழின் முன்னணி நடிகர்களுடன் எல்லாம் நடிக்கிறார். அதிலும் மலையாளத்திலும், தமிழிலும் அவருக்கு ஏகப்பட்ட படங்கள் வருகிறது. இதன் காரணமாக ஒரு தேசிய திரைப்பட விருது, ஐந்து கேரள மாநில திரைப்பட விருதுகள், மூன்று தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் மற்றும் இரண்டு பிலிம்பேர் விருதுகள் வெல்கிறார்.  

இப்படி தன்னுடைய சினிமா வாழ்க்கையில் உயர்ந்து கொண்டே இருந்தாலும் சொந்த வாழ்க்கையில் சரிவையே சந்தித்து இருக்கிறார். இவர் முதலில் திருமணம் செய்த மனோஜ் கே.ஜெயன் ஒரு சினிமா நடிகர். அவர் தன் குடும்பத்துடன் வீட்டில் அமர்ந்தே மது அருந்துவார் என்றும், திருமணத்துக்கு பிறகு தொடர்ச்சியாக எனக்கு மது பழக்கத்தினை ஏற்படுத்தியதும் அவர் தான் என ஊர்வசி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : கஷ்டப்பட்டு பாடினேன்!.. இப்படியா எடுப்பீங்க?!… எஸ்.பி.பி குறை சொன்ன ஒரே பாடல் அதுதான்!..

என்னை அவர் தான் குடிக்க கட்டாயப்படுத்தினார். தொடர்ச்சியாக ஊத்திக்கொடுத்தார். அவரால் தான் நான் மதுவிற்கே அடிமையானேன். இதனால் கடைசியில் என்னுடைய முதல் வாழ்க்கையை விவாகரத்து செய்ய முடிவெடுத்தேன்.  அது எனக்கு பெரிய மன உளைச்சலை கொடுத்தது.

இதை தொடர்ந்தே என்னுடைய தற்போதைய கணவர் சிவபிரசாத்தினை திருமணம் செய்து கொண்டேன். அப்போது எனக்கு வயது 40. அதுவே பெரிய பிரச்னையாக பேசப்பட்டது. இருந்தும் அவர் எனக்கு துணையாக இருந்தார். முதல் கணவருடன் எனக்கு ஒரு பெண் இருக்கிறார். இரண்டாவது கணவருடன் தற்போது ஒரு அருமையான மகன் இருக்கிறார் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

Continue Reading

More in Cinema News

To Top