கஷ்டப்பட்டு பாடினேன்!.. இப்படியா எடுப்பீங்க?!... எஸ்.பி.பி குறை சொன்ன ஒரே பாடல் அதுதான்!..
தமிழ் சினிமாவில் தனது இனிமையான குரலால் இசை ரசிகர்களை கட்டிப்போட்டவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி முதல் விஜய், அஜித் வரை 4 தலைமுறைகளுக்கு பாடல்களை பாடியிருக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என 10க்கும் மேற்பட்ட மொழிகளில் 10 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடி சாதனை படைத்தவர்.
80,90களில் இளையராஜாவின் இசையில் இவர் பாடிய அனைத்து பாடல்களுமே தேவகானம்தான். ரஜினி,கமல்,விஜயகாந்த், கார்த்திக், பிரபு, சத்தியராஜ், மோகன், ராமராஜன் என அப்போது முன்னனி ஹீரோக்களாக இருந்த எல்லோருக்கும் இவர்தான் பாடினார். இப்போதும் பலரும் விரும்பி கேட்கும் இளையராஜாவின் பாடல்களில் பெரும்பாலானவை எஸ்.பி.பி. பாடியதுதான்.
இதையும் படிங்க: எஸ்.பி.பி ரொம்ப கடுப்பாகிட்டார்.. ‘தந்தானே தாமரப்பூ’ பாடலுக்கு பின்னால் இத்தனை பிரச்சனையா?
சிறந்த பாடகருக்கான தேசிய விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். அதுபோக பல விருதுகளை வாங்கியவர் இவர். இளையராஜா மட்டுமில்லாமல் ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, ராஜ்குமார், மரகதமணி, சங்கர் - கணேஷ், வித்யாசாகர், பரத்வாஜ் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடியவர் இவர். திரையுலகில் அதிக இசையமைப்பாளர்களிடம் பாடிய பாடகர் இவராகத்தான் இருப்பார்.
பல திரைப்படங்களில் காட்சிக்கு ஏற்றவாறு தனது குரலை மாற்றியும் பாடியிருப்பார். 80களில் இளையராஜாவின் இசையில் பல பாடல்கள் அவருக்கு அப்படி அமைந்ததுண்டு. அதாவது, படத்தின் ஹீரோ மாறு வேஷத்தில் வில்லன் முன்பே வந்து பாட்டு பாடி நடனம் ஆடுவார். அதற்காக குரலில் வித்தியாசம் காட்டி பாடியிருப்பார் எஸ்.பி.பி.
இதையும் படிங்க: எஸ்.பி.பி பாடிய முதல் பாடலா இது? குரல் சரியில்லையென விரட்டியடித்த தயாரிப்பாளர்
எஸ்.பி.பி வித்தியாசமாக பாடிய பாடலை வித்தியாசமாக, அதாவது ஹீரோவின் கெட்டப்பையும் மாற்றி எடுத்தால் மட்டுமே செட் ஆகும். ஆனால், அவர் அப்படி பாடிய பாடல் ஒன்றை சாதாரணமாக எடுத்து சொதப்பி வைத்தபோது எஸ்.பி.பி கோபப்பட்ட சம்பவமும் சினிமாவில் நடந்துள்ளது.
ரஜினி நடித்து 1983ம் வருடம் வெளிவந்த திரைப்படம் பாயும் புலி. இப்படத்தில் இடம் பெற்ற ‘ஆடி மாசம் காத்தடிக்க’ என்கிற பாடலுக்கு தனது வழக்கமான குரலை மாற்றி வேறுமாதிரி எஸ்.பி.பி பாடியிருந்தார். ஆனால், அந்த பாடலில் ரஜினிக்கு எந்த கெட்டப்பும் இல்லமால், சாதரணமாக வந்து நடித்திருப்பார்.
இதைப்பார்த்த எஸ்.பி.பி ‘எவ்வளவு கஷ்டப்பட்டு பாடினேன். இதுக்குதான் என்னை அப்படி பாட வச்சீங்களா?.. இதுக்கு நான் எப்பவும் போலவே பாடியிருப்பேனே’ என இயக்குனரிடம் கோபப்பட்டாராம்.
இதையும் படிங்க: கேப்டனை தவிர யாராலும் பண்ண முடியாது! விஜயகாந்துக்காக ரஜினி விட்டுக்கொடுத்த படம்