Categories: Cinema News latest news

கேட்டாங்களே நச்சுனு ஒரு கேள்வி! விஜய் மீது பெரிய குற்றச்சாட்டை வச்ச வனிதா.. தளபதி கேட்பாரா?

Actress Vanitha Vijay: தமிழ் சினிமாவில் விஜய் இப்போது ஒரு முன்னணி நடிகராக இருந்து வருகிறார். ரஜினி கமல் எம்ஜிஆர் சிவாஜி இவர்கள் வரிசையில் இப்போது விஜய்யும் மாஸ் காட்டி வருகிறார். தற்போது விஜய் கோட் படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக அவருடைய 69 ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார்.

விஜயின் படங்களை பொறுத்த வரைக்கும் சமீப காலமாக ஆங்கிலத்திலேயே அவருடைய படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.  இதைப்பற்றி பல பேர் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் .அதுவும் இப்போது அவர் அரசியலில் ஆர்வம் காட்டி வருவதால் இனிமேல் அதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுரை கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஹரா படத்துக்கு அதை நம்பி போனா ஏமாந்துருவீங்க… புதுசா கொஞ்சம் யோசிங்கப்பா…!

ஆனால் அஜித்தை பொருத்தவரைக்கும் அவருடைய படங்களின் பெயர்கள் சுத்த தமிழில் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த நிலையில் வனிதா நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் திரைப்படம் தண்டுபாளையம்.  அந்த படத்தின் ப்ரிவ்யூ ஷோவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய வனிதாவிடம் விஜயின் கோட் திரைப்படத்தைப் பற்றி பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தார்கள்.

ஏற்கனவே விஜயும் வனிதாவும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் சேர்ந்து சந்திரலேகா என்ற படத்தில் இணைந்து நடித்திருக்கின்றனர். அந்த வகையில்  ‘உங்களுடைய நண்பர் விஜய் தமிழில் பெயர் வைக்காமல் ஆங்கிலத்திலேயே அவருடைய படங்களின் பெயரை வைக்கிறாரே? இதையெல்லாம் கேட்க மாட்டீர்களா ?’என ஒரு பத்திரிக்கையாளர் கேட்டார் .

இதையும் படிங்க: ரஜினியோட அந்தப் படம் 3 படையப்பாவுக்குச் சமமா..? அப்புறம் ஏன் மிஸ் ஆச்சு?

அதற்கு பதில் அளித்த வனிதா   ‘ஏங்க அவர் எனக்கே வாய்ப்பு கொடுக்கலைங்க. ஒரு தமிழ் நடிகைக்கே வாய்ப்பு கொடுக்காதவரு எப்படி தமிழ்ல பேர் வைப்பாரு? வாங்க எல்லாரும் போய் இதை கேட்போம். அதை விட்டுட்டு படத்தின் டைட்டில் பத்தி கேக்குறீங்க’ என கிண்டலாக பதில் கூறினார்

அது மட்டும் இல்லாமல் விஜயின் அரசியல் குறித்து கேள்வி கேட்டபோது அதை இங்கு பேச வேண்டாம் .இப்போது படத்தை பற்றி மட்டுமே பேசுவோம் எனக் கூறினார் வனிதா. அவர் கிண்டலாக சொன்னாலும் ஆனால் அதுதான் நிஜம். தமிழில் எத்தனையோ நடிகைகள் திறமைகளுடன் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கும் சமயத்தில் பிறமொழி நடிகைகளை பெரும்பாலும் பெரிய பெரிய நடிகர்களின் படங்களில் பார்க்க முடிகிறது. அது குறைந்தால் மட்டுமே இங்கு உள்ள தமிழ் நடிகைகளுக்கு வாய்ப்புகள் அதிகமாக வரும். இதை மற்ற நடிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க: சத்தியராஜ் சொன்ன வசனம்!.. பேச மறுத்த கவுண்டமணி!.. நடிகன் படத்தில் நடந்த கலாட்டா!…

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini