×

விஜய்யை அங்கிள் என சொல்லி வாங்கிக் கட்டிக்கொள்ளும் நடிகை… இதெல்லாம் டூ மச்!

சீரியல் நடிகை ஹீமா பிந்து விஜய்யை அங்கிள் என அழைத்தது விஜய் ரசிகர்களின் கோபத்தைத் தூண்டியுள்ளது.

 

சீரியல் நடிகை ஹீமா பிந்து விஜய்யை அங்கிள் என அழைத்தது விஜய் ரசிகர்களின் கோபத்தைத் தூண்டியுள்ளது.

விஜய் கையில் ஒரு சிறு குழந்தையை கையில் வைத்திருந்தார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்டது அந்தப் புகைப்படம். அந்த குழந்தை வளர்ந்து இப்போது சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அது வேறும் யாருமில்லை. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இதயத்தை திருடாதே சீரியல் புகழ் ஹிமா பிந்துதான்.

இந்நிலையில் சமீபத்தில் பேசிய பிந்து விஜய்யப் பற்றி கூறும்போது, ‘சின்ன வயசுல விஜய அங்கிள்ன்னு தான் கூப்பிட்டேன், இப்போதும் அவர் எனக்கு அங்கிள் தான்’  எனக் கூறியிருந்தார். இதில் அவர் விஜய்யை அங்கிள் என சொன்னது விஜய் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. 45 வயது நடிகரை ஒரு 20 வயது பெண் அங்கிள் என அழைப்பதில் என்ன தவறு என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News