Categories: Cinema News latest news

அந்த விஷயத்திற்காக ஹீரோயினை செலக்ட் செய்யும் ஹீரோக்கள்.. உண்மையை தோலுரிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்….

தமிழ் சினிமாவில் நன்கு நடிக்க தெரிந்த நடிகைகளின் மிக முக்கியமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தனக்கு எந்தவிதமான கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதனை கட்சிதமாக எந்த குறையும் இன்றி செய்து முடிப்பதில் இவர் கில்லாடி.

இவர் நடிப்பில் காக்கா முட்டை, வடசென்னை, கா/பெ.ரணசிங்கம், கனா, நம்ம வீட்டு பிள்ளை , சூழல் வெப் தொடர் என பல்வேறு திரைப்படங்கள், வெப் தொடர் இவரது நடிப்புக்கு சான்றாக உள்ளன. அதன் காரணமாக இவர் முன்னணி வேடத்திலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படியுங்களேன்  –  நயன்தாரா, சமந்தாவின் ஒரு நாள் மேக்கப் செலவு தெரியுமா..? மிரண்டு போன தயாரிப்பாளர்கள்.!

இவர் அண்மையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டு பல்வேறு விஷயத்தை திரை மறைவு ரகசியத்தை வெளிப்படையாக கூறினார். அதாவது,’ சில ஹீரோக்கள், படக்குழுவினர் இருக்கிறார்கள். அவர்கள் ஹீரோயின்கள் பார்க்க அழகாக இருந்தால் போதும். கிளாமராக இருந்தாலே போதும். என தேர்ந்தெடுத்து விடுவார்கள்.

இதையும் படியுங்களேன்  – சிம்பு படத்திற்கு பெரிய ஆபத்து.. கொண்டாட்டத்தில் சினிமா ரசிகர்கள்… விவரம் உள்ளே…

ஆனால், ஒரு சில ஹீரோக்கள் நன்கு அந்த கதாபாத்திரத்தை உள்வாங்கி நடிக்க தெரிந்த பெண் தான் வேண்டும் என்று கேட்பார்கள். அந்த கதாபாத்திரத்தை கட்சிதமாக செய்து முடிக்கும் புதுமுக நடிகைகளாக இருந்தாலும் பரவாயில்லை என்று கேட்கும் ஹீரோக்களும் இருக்கிறார்கள்.’ அப்படிப்பட்ட ஹீரோக்களும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஹீரோக்களும் இருக்கிறார்கள். இதுதான் தமிழ் சினிமா.’ என்று வெளிப்படையாக தனது பதிலை கூறி அசத்தியினார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இவர் முன்னணி கதாநாயகியாக நடித்த டிரைவர் ஜமுனா எனும் திரைப்படம் விரைவில் ஓடி தளத்தில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ட்ரெய்லர் நடிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

Manikandan
Published by
Manikandan