Categories: Cinema News latest news throwback stories

சிவாஜியுடன் அஜித் இணைய இருந்த திரைப்படம்… குரு துரோகம் செய்ய முடியாது என மறுத்த இயக்குனர்…

Sivaji: தமிழ்சினிமாவில் சிவாஜி கணேசனுடன் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். ஆனால் அஜித் மட்டும் ஒரு படம் கூட நடிக்கவில்லை. ஆனால் அவருக்கு ஒரு வாய்ப்பு வந்தும் அது மிஸ்ஸான சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுடன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கணக்கில்லாமல் படங்களில் நடித்திருக்கிறார். விஜயுடன் ஒன்ஸ் மோர் படத்தில் நடித்திருக்கிறார். ஆனால் அஜித்துக்கு மட்டும் அப்படி ஒரு சந்தர்ப்பமே அமையாமல் போனது.

இதையும் படிங்க: இனிமேல் எல்லாம் முடிஞ்சி போச்சி… சூப்பர்ஸ்டாரை பார்த்து பயந்த எம்.ஜி.ஆர்!..

ஆனால் அப்படி ஒரு படம் நடக்க இருக்க அது ஒருவரின் நல்ல எண்ணத்தால் தான் மிஸ்ஸானதாம். சரத்குமார் நடித்த மகா பிரபு திரைப்படத்தின் மூலம் யக்குநராக எண்ட்ரி கொடுத்தவர் ஏ.வெங்கடேஷ். இப்படத்தை விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி தயாரித்தார். இதை தொடர்ந்து பூப்பறிக்க வருகிறோம் படத்தினை இயக்க இருக்கிறார் ஏ.வெங்கடேஷ். அதை தெரிந்துகொண்ட ஜிகே ரெட்டி தானே தயாரிப்பதாக கூறுகிறார்.

அதில் தன் மூத்த மகன் அஜயை நடிக்க வைக்கலாம் என்கிறார். ஒரு கேரக்டருக்கு சிவாஜி கணேசனிடம் கேட்க அவரும் படத்தின் கதை பிடித்துவிட உடனே ஓகே சொல்லிவிடுகிறார். இதனால் படத்தின் பெயர் பூப்பறிக்க வருகிறோம் என அறிவிக்கப்பட்டு முதற்கட்ட பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த நேரத்தில் சி.வி.ராஜேந்திரன் வந்து ஏ,வெங்கடேஷை சந்திக்க வருகிறார்.

இதையும் படிங்க: ஒரு போட்டோவை வச்சி படத்தை ஹிட் ஆக்கிய எம்.ஜி.ஆர்!.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே!..

இந்த படத்தின் கதை எனக்கு பிடித்து இருக்கிறது. நானே தயாரிக்கிறேன். அஜய் கேரக்டருக்கு அஜித்தை பேசலாம் என்கிறார். நானே அஜித்தின் கால்ஷூட்டை வாங்கி தருவதாக கூறுகிறார். ஏ.வெங்கடேஷ் ஒருநாள் முழுவதும் யோசித்தாராம். அந்த படத்தில் அஜித் நடித்தால் வேறு மாதிரியான புரோமோஷன் கிடைக்கும். நல்ல ரீச் வரும் என்றாலும் வெங்டேஷுக்கு அது சரியாக தோன்றவில்லையாம்.

தன்னுடைய முதல் படத்தின் தயாரிப்பாளரான ஜி.கே.ரெட்டியின் மகன் அஜயை இயக்குவது தான் சரி என முடிவெடுத்து விட்டார். அதை சி.வி.ராஜேந்திரனிடம் சொல்லி இருந்தார். இருந்தும் அப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. சிவாஜி கணேசன் கேரியரில் கடைசி படம் என்ற அந்தஸ்த்தை மட்டுமே பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Shamily