Connect with us

Cinema News

பொறுப்பில்லாமல் சுற்றிக்கொண்டிருந்த ஆர்யா.. பாடம் புகட்ட அஜித் பட இயக்குனர் செய்த வேலை!..

தமிழில் 2005 ஆம் ஆண்டு வந்த அறிந்தும் அறியாமலும் திரைப்படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஆர்யா. அந்த படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதனை தொடர்ந்து அவருக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைத்தன.

தற்சமயம் இவர் நடித்த காதர் பாஷா என்னும் முத்துராமலிங்கம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. மற்ற நடிகர்களை போல் அல்லாமல் சினிமாவிற்கு மிக எளிதாகவே வந்தவர் நடிகர் ஆர்யா. அறிந்தும் அறியாமலும் திரைப்படத்திற்கு முன்பே ஆர்யா நடித்த திரைப்படம் உள்ள கேட்குமே.

arya

மாடலிங் துறையில் இருந்த ஆர்யாவிற்கு இந்த படத்திற்கு எளிமையாகவே வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு அதிக படவாய்ப்புகள் ஆர்யாவிற்கு வந்தது. ஆனால் அவற்றில் எல்லாம் விருப்பம் காட்டாமல் இருந்தார் ஆர்யா. இந்த சமயத்தில்தான் இயக்குனர் விஷ்ணுவர்தன் அறிந்தும் அறியாமலும் திரைப்படத்தின் கதையை எழுதி கொண்டிருந்தார்.

இயக்குனர் கொடுத்த அட்வைஸ்:

அந்த படத்திற்கு ஆர்யா சரியாக இருப்பார் என நினைத்தார் விஷ்ணுவர்தன். ஆனால் ஆர்யா படங்களில் எல்லாம் விருப்பம் காட்டாமல் இருந்தார். இதை பார்த்த விஷ்ணுவர்தன் அவரை அழைத்துக்கொண்டு ஒரு படத்தின் படப்பிடிப்பிற்கு சென்றுள்ளார். அங்கு ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு 300 நபர்கள் காத்துக்கொண்டு நின்றனர்.

அவர்களை காட்டிய விஷ்ணுவர்தன் இவர்கள் எல்லாம் சினிமாவில் ஒரு வாய்ப்பாவது கிடைக்காதா? என காத்துக்கொண்டுள்ளனர். ஆனால் உனக்கு எளிதாக சினிமா வாய்ப்பு கிடைத்ததால் அதை உதாசீனப்படுத்துகிறாய் என கூறியுள்ளார்.

அதன் பிறகு தனது தவறை உணர்ந்த ஆர்யா விஷ்ணுவர்தனுடன் இணைந்து அறிந்தும் அறியாமலும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதை பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: வடிவேலுவுக்கு எமனா வந்ததே அந்தப் படம்தான்! எல்லாரோட சாபத்தையும் வாங்குறாரு

Continue Reading

More in Cinema News

To Top