Categories: Cinema News latest news

அஜித்துடன் சுசித்ரா எடுத்த பழைய செல்ஃபி!.. ஷேர் செய்து அசிங்கப்படுத்தும் விஜய் ரசிகர்கள்!..

ஒரு காலத்தில் பிரபல பின்னணிப் பாடகியாக இருந்த சுசித்ரா விஜய் மற்றும் அஜித் படங்களுக்கு பாடல்களை பாடியுள்ளார். திரிஷா நடிப்பில் வெளியான லேசா லேசா படத்தில் இடம்பெற்ற எனை போலவே காற்று பாடலை சித்ரா உடன் இணைந்து பாடி பாடகியாக அறிமுகமானார் சுசித்ரா.

ஜேஜே படத்தில் இடம்பெற்ற மே மாசம் 98ல் மேஜர் ஆனேனே என்கிற பாடல் இவருக்கு மிகப்பெரிய வெற்றி பாடலாக மாறியது. காக்க காக்க படத்தில் இடம்பெற்ற உயிரின் உயிரே, வல்லவன் படத்தில் இடம் பெற்ற யம்மாடி ஆத்தாடி, இடம் பெற்ற டோலு டோலு தான் அடிக்கிறான், என் செல்லப்பேரு ஆப்பிள், மங்காத்தா படத்தில் இடம் பெற்ற வாடா பின்லேடா என பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார் சுசித்ரா.

இதையும் படிங்க: 2வது கல்யாணம் பண்ணியும் எனக்கு குழந்தையே இல்லை.. சுசித்ரா கணவர் கார்த்திக் குமார் வெளியிட்ட வீடியோ!

வேட்டைக்காரன் படத்தில் இடம்பெற்ற ஒரு சின்ன தாமரை பாடல் அஜித்துக்கு மிகவும் பிடித்த பாடல் என்றும் விஜய்க்கு மட்டும் எப்படி இப்படி அமைகிறது என பார்ட்டி ஒன்றில் நடிகர் அஜித் கேட்டதாக சுசித்ரா பேசியதை வைத்து நேற்று முதல் இந்திய ரசிகர்கள் அஜித் குமாரை அசிங்கப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது அஜித் மற்றும் சுசித்ரா எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டு அஜித் பார்ட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் ஃபுல் மப்புல இருக்காரு தல என்றும் கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தனுஷ் பாட்டுக்கு திடீரென டான்ஸ் போட்ட ஷிவானி நாராயணன்!.. அவர் டிரெஸ்ஸை மட்டும் பார்த்துடாதீங்க!..

சினிமா பிரபலங்கள் படங்களிலேயே சரக்கு அடிப்பது போன்ற காட்சிகளில் அசால்ட்டாக நடித்து வருகின்றனர். அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏகப்பட்ட பார்ட்டிகளில் பங்கேற்று வருவது எல்லாம் சாதாரண விஷயம். அதை வைத்து ரசிகர்கள் சண்டை போடுவது சரியா என கேட்டு வருகின்றனர்.

விஜய் ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஜய் பார்ட்டி பண்ண போட்டோக்களை அஜித் ரசிகர்கள் ஷேர் செய்து ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் எந்தளவுக்கு டேமேஜ் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு டேமேஜ் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: மத்தவங்க பேசட்டும்!.. எனக்கு வேலை இருக்கு!.. இளையராஜா வெளியிட்ட வீடியோ…

Saranya M
Published by
Saranya M