Categories: Cinema News latest news

இதுக்கு மேல காச கொட்ட முடியாது!.. வெளிநாட்டுல இருந்து அஜித் படத்தை விரட்டிய தயாரிப்பு நிறுவனம்?..

லைகா தயாரிப்பில் அஜித் குமார் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் மொத்தமாக அஜர் பைஜானில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது படக்குழுவினர் அங்கிருந்து கிளம்பி சென்னைக்கு வந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விடாமுயற்சி படத்தின் மொத்த சூட்டிங் முடிந்து திரும்பினார்களா என்றால் அதுதான் இல்லையாம். அடிக்கடி அந்த இடத்தில் வானிலை மோசமடைந்து வருவதன் காரணமாக படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த முடியாமல் பலமுறை தடங்கல்கள் ஏற்பட்டு வந்துள்ளன.

இதையும் படிங்க: பாலிவுட்டை காப்பாத்துனவருக்கே விருது இல்லையா!.. 6 விருதுகளை அள்ளிய அனிமல்.. கடுப்பான ஃபேன்ஸ்!..

ஆனால், அஜித் மற்றும் மகிழ்திருமேனி விடாப்பிடியாக அஜர் பைஜானிலேயே மொத்த படப்பிடிப்பையும் நடத்தி முடிக்க வேண்டும் என இத்தனை மாதங்கள் பெருமளவில் செலவை இழுத்து விட்டதாகவும் தயாரிப்பு நிறுவனம் இதற்கு மேல் அங்கே காசை தேவையில்லாமல் கொட்ட வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், வேறொரு இடத்திலோ அல்லது சென்னையிலேயே செட் போட்டோ படத்தை முடிக்க உத்தரவிட்டு இருப்பதாக ஷாக்கிங் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விடாமுயற்சி திரைப்படம் இதுவரை 70 சதவீதம் தான் முடிந்துள்ளது என்றும் இன்னும் சில மாதங்கள் படப்பிடிப்பு நடத்தினால்தான் மொத்த படத்தையும் முடிக்க முடியும் என்கிற நிலையில் தான் எந்தவொரு அப்டேட்டையும் கொடுக்காமல் ரசிகர்களுக்காக வெறும் அஜித் எடுத்த போட்டோக்களை மட்டுமே போட்டு வருகின்றனர் என்கின்றனர்.

இதையும் படிங்க: கேபிஒய் பாலா ஒரு பொண்ணோட கையை புடிச்சு காட்டுறாரே!.. அதுல என்ன இருக்குன்னு பாருங்க.. ஒரே ஷாக்!..

விடாமுயற்சி திரைப்படம் எதிர்பார்த்தது போல வரவில்லை என்றும் மகிழ் திருமேனி லைகாவுக்கு வீண் செலவுகளை தான் இழுத்து விட்டார் என்றும் கூறுகின்றனர். அதே போல அஜித்தின் அடுத்த படம் குறித்து வெளியாகும் தகவல்கள் எல்லாம் உருட்டு என்றும் இதுவரை எதுவும் கன்ஃபார்ம் ஆகவில்லை என அதிர்ச்சியை கிளப்புகின்றனர்.

Saranya M
Published by
Saranya M