Categories: Cinema News latest news

அந்த 2 படம் மிஸ் ஆகிடுச்சு!.. இந்த முறை விடக்கூடாது!.. இயக்குநரை டார்ச்சர் செய்யும் அஜித்?..

விஜய்யுடன் எப்படியாவது போட்டி போட்டு தனது கெத்தை நிரூபிக்க வேண்டும் என தொடர்ந்து அஜித்குமார் முயற்சி செய்து வருவதாகவும் அதன் காரணமாகவே விடாமுயற்சி இயக்குனர் மகிழ் திருமேனியை அவர் தொல்லை செய்து வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பல ஆண்டுகளாக இல்லாத போட்டி மனப்பான்மை திடீரென்று நடிகர் அஜித்துக்கு துணிவு படத்தின் மீது இருந்த அசைக்க முடியாத நம்பிக்கை காரணமாக எழுந்தது. அந்த படம் நிச்சயம் பந்தையம் அடிக்கும் என நினைத்து விஜய்யின் வாரிசு திரைப்படம் வெறும் ஃபேமிலி டிராமா படம் தான் என்பதால் துணிந்து மோதினார்.

இதையும் படிங்க: யார வச்சு படம் எடுத்தாலும் பாப்போம்னு நினைச்சீங்களா? ரசிகர்களின் எரிச்சலை பெற்ற திரைப்படம்

ஆனால், படத்தின் ரிசல்ட் துணிவு படத்தை விட வாரிசு படம் அதிகம் வசூல் ஈட்டி அஜித்தை தோல்வி அடைய செய்தது. வாரிசு படத்துடன் போட்டி போடாமல் தனித்து வந்திருந்தால் துணிவு படம் மேலும் அதிக வசூலை ஈட்டியிருக்கும் என்றே கூறுகின்றனர்.

அடுத்ததாக லியோ படத்துக்கு போட்டியாக விடாமுயற்சி படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என நினைத்த அஜித்குமார் விக்னேஷ் சிவன் பிரச்சனை காரணமாக ஏகே62 படம் பல மாதங்கள் தள்ளிப் போனது.

இதையும் படிங்க: 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த விஜயகாந்த்!.. ஆனா கேப்டன் செஞ்சதுதான் ஹைலைட்!..

லியோ திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி படமாக மாறிய நிலையில், அடுத்ததாக விஜய் நடித்து வரும் கோட் படத்துக்கு போட்டியாக விடாமுயற்சி படத்தை வெளியிட்டே ஆக வேண்டும் என்கிற முயற்சியில் இயக்குனர் மகிழ் திருமேனிக்கு நடிகர் அஜித் நிறைய டார்ச்சர்கள் கொடுத்து விடுவதாக செய்யாறு பாலு சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

இந்த முறை எப்படியும் விடாமுயற்சி vs கோட் போட்டி நடைபெறும் என்றே கூறுகின்றனர். குட் பேட் அக்லி படத்தை அறிவித்தாலும், விடாமுயற்சி படத்தை மீண்டும் ஸ்பீடு செய்ய இதுதான் காரணம் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சந்தானம் சொன்னதை கேட்கல!.. உடம்பு பூரா நோய்.. தீய நண்பர்கள் சகவாசம்.. லொள்ளு சபா ஆண்டனி உருக்கம்!..

Saranya M
Published by
Saranya M