Connect with us

Cinema News

நீ பெரிய ஆளா மாறுவ? இது நடந்தா எனக்கு கால்ஷீட் வேணும்!.. அஜித்தை லாக் செய்த இயக்குனர்….

Ajithkumar: தமிழ் சினிமாவில் வாரிசு பிரபலங்கள் அதிகம். ஆனால் யாரின் துணையும் இல்லாமல் தனியாக நுழைந்து போராடி தனக்கென ஒரு இடத்தினை பிடித்து வைத்து இருக்கும் நடிகர்  அஜித் தான். ஆனால் அவருக்கே சரியாக குறி சொன்ன இயக்குனர் குறித்த ஆச்சரிய தகவல் வெளியாகி இருக்கிறது.

பிரேம புஸ்தகம் என்ற தெலுங்கு படத்தில் நடித்து எண்ட்ரியானவர் அஜித்குமார். அதை பார்த்து தமிழில் அமராவதி படத்துக்கு அவரை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பரிந்துரைக்க தமிழிலும் நடிக்க வந்தார். ஆரம்பத்தில் அவருக்கு கோலிவுட் எண்ட்ரி கஷ்டமானதாகவே இருந்தது. 

இதையும் படிங்க: சிவகார்த்திகேயனா? சூர்யாவா?!.. விஜயின் இடத்தை பிடிக்க ஸ்கெட்ச் போடும் நடிகர்கள்!..

இருந்தும் தொடர்ச்சியாக நடித்து கொண்டு இருந்தார். பைக் ரேஸில் ஆர்வம் இருந்த அஜித் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்வார். இதுவும் அவருக்கு நிறைய பின்னடைவுகளை கொடுத்தது. ஆனாலும் நடிப்பை சரியாக கையாண்டதால் தமிழில் உச்ச நட்சத்திரமாக இன்றும் இருக்கிறார்.

ஆனால் இவர் இத்தனை பெரிய நடிகராக உயருவார் என்பதை நடிகரும், இயக்குனருமான அனு மோகன் அவரின் ஆரம்ப காலத்திலேயே சொல்லிவிட்டாராம். பவித்ரா படத்தின் போது இயக்குனர் சுபாஷுடன் பேசிக்கொண்டு இருக்க அனு மோகன் அங்கு போவாராம். அப்போது அஜித்துடன் பழக்கம் ஏற்பட்டதாம்.

அப்போ அனு மோகனுக்கு ஜோசியம் தெரியும் என்பதால் அஜித்துக்கு எப்படி இருக்கும் என்பதை சுபாஷ் அவரிடம் பார்க்க சொல்லி இருக்கிறார். கைரேகை, பிறந்தநாள், நேரத்தினை கேட்டு தெரிந்து கொள்கிறார். இதே நேரம் அடுத்த வருடம் உன் வீட்டில் பத்து தயாரிப்பாளர் காத்திருப்பார்கள் என்றாராம்.

இதையும் படிங்க:இளையராஜாவை பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? அவரு எப்படிப்பட்ட ஆள் தெரியுமா? வெடித்த பிரபலம்…

இதை கேட்ட அஜித் சிரித்துவிட்டு ‘அட போங்க சார்’ என்கிறார். ‘அப்படி நடந்தா எனக்கு நீ கால்ஷூட் தரணும்’ என்றாராம். அஜித்தும் ஓகே எனக் கூறிவிட்டார். அதுப்படியே, இரண்டு வருடத்திற்குள் அவர் காதல் கோட்டை நடித்து உச்சத்துக்கு செல்கிறார். அந்த நேரத்தில் அனு மோகனை சந்தித்தாராம்.

சார் நீங்க சொன்ன மாதிரியே நடந்துட்டு, என் சம்பளம் இப்போ இவ்வளோ. நீங்க பாதி தந்தா போதும். கதை கூட கேட்க மாட்டேன். எப்போ படம் செய்யலாம் என்றாராம். ஆனால் அது கடைசியில் நடக்காமல் போய்விட்டதாம். இருந்தும் சொன்ன வார்த்தையை அஜித் தவறாமல் செய்வேன் எனச் சொன்னதுக்கே அவர் பெரிய மனிதர் எனவும் புகழ்ந்து பேசி இருக்கிறார்.

இதையும் படிங்க: இது எதுக்குடா வம்பு? நைசாக நழுவி நின்ன ரஜினி.. எல்லா களத்துலயும் கிங்னு நிரூபிச்ச விஜய்

Continue Reading

More in Cinema News

To Top