ஆதிக் படத்தில் ராசி நம்பரில் சம்பளம் வாங்கிய அஜித்.. இதுலைலாம் தெளிவா தான் இருக்கீங்க!..
Jan 2, 2024, 17:02 IST
Ajithkumar: விடாமுயற்சி படத்தினையே முடிப்பாரா எனத் தெரியவில்லை. சமீபகாலமாக அஜித் செய்யும் அட்ராசிட்டிக்கு அளவே இல்லை என்று தான் சிலர் கிசுகிசுத்து வருகின்றனர். இதில் அவரின் அடுத்த படத்துக்கு சம்பளத்தில் கூட ராசி பார்த்து ஒரு வேலை செய்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அஜர்பைனானில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. இப்படத்தில் அஜித், அர்ஜூன், த்ரிஷா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். கிட்டத்தட்ட துணிவு படத்தினை போல இதுவும் ஒருநாளில் நடக்கும் கதை என்றே சொல்லப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இதுவரை பாதி மட்டுமே முடிந்துள்ள நிலையில், அஜித்தின் அடுத்த படம் குறித்த தகவல்களும் ரிலீஸ் ஆகி இருக்கிறது. இதையும் படிங்க: இந்த வருசத்தோட மிகப்பெரிய உருட்டு இதுவா தான் இருக்கும்..! நிக்சன் நீங்களாம் திருந்த வாய்ப்பே இல்ல..! மார்க் ஆண்டனி என்னும் வெற்றி படத்தினை கொடுத்த ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கிறார். ரொம்ப வருடங்கள் கழித்து அஜித்தின் கேரியரில் காமெடி கலந்து கதையாக இது அமைய இருக்கிறதாம். இப்படத்தினை தெலுங்கில் பிரபல மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க இருக்கின்றனர். இப்படத்துக்கு அஜித்தின் சம்பளமாக 163 கோடி ரூபாய் பேசப்பட்டு இருக்கிறதாம். அதில் 25 கோடி கொடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இன்றைய மார்க்கெட் நிலவரப்படி அஜித்தின் படமே 250 கோடிக்குள் தான் வியாபாரம் செய்யப்பட்டு வருகிறது. இப்படத்துக்கு அவரின் சம்பளாக 163 கோடி கொடுக்கும் போது மற்ற செலவுகளுடன் 300 கோடி வந்துவிடும். இதனால், நிறுவனத்துக்கு படம் தொடங்குவதற்கு முன்னரே 50 கோடி வரை நஷ்டம் ஆகுமாம். இதையும் படிங்க: உனக்கு 24 எனக்கு 44.. பிரேம்ஜியின் கல்யாணம் உண்மை தானாம்… பலருக்கு ஹார்ட் அட்டாக் கன்பார்ம்!..
இதில் இன்னோரு சுவாரஸ்யம், அஜித்தின் ராசி நம்பர் ஒன்றாம். அதற்காகவே 163 கோடி ரூபாயை சம்பளமாக வாங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. விடாமுயற்சி படத்தின் ரீச் நன்றாக இருந்தால் சம்பளம் மேலும் அதிகரிக்கலாம். கொஞ்சம் நழுவினால் கூட அஜித்தின் சம்பளத்தில் பெரிய துண்டு தான் எனவும் கிசுகிசுக்கின்றனர்.
இதனை காரணமாக வைத்தே கோலிவுட்டின் சத்யஜோதி பிலிம்ஸ் அஜித்துக்கு 115 கோடி வரை தான் சம்பளமாக தருவோம் என்று கூறியுள்ளனர். அதற்கு அஜித் தரப்பு மறுப்பு தெரிவித்த பட்சத்தில் அந்த நிறுவனமும் இந்த படத்தில் இருந்து விலகி இருக்கின்றனர். இதனால் தான் அஜித்தின் இந்த படத்தின் தயாரிப்பாளராக தெலுங்கு நிறுவனத்தினை ஓகே செய்ததும் குறிப்பிடத்தக்கது.
