தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித் துணிவு படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். வெளி நாடுகளில் படப்பிடிப்புகள் முடிவடைந்து இப்போது டப்பிங் வேலைகள் போய்க் கொண்டிருக்கின்றன.
இந்த படத்தில் மஞ்சு வாரியார்,சமுத்திரக்கனி, அமீர், பாவ்னி, போன்ற நடிகர்கள் நடிக்கின்றனர். போனிகபூர் தயாரிக்க எச்.வினோத் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இசையமைப்பாளர் ஜிப்ரான் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
இதையும் படிங்க : “வேண்டாம் சார் விட்ருங்க”… எச்சரித்த ஸ்ரீதர்… தோல்வி படத்தை அடம்பிடித்து உருவாக்கிய எம்.எஸ்.வி… எல்லாம் நேரம்தான்…
படம் வருகிற பொங்கல் அன்று திரைக்கு வரவிருக்கிறது. தமிழ் நாடு தியேட்டர் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வாங்கி படத்தை ரிலீஸ் செய்கிறது. இந்த நிலையில் இந்த படத்தில் நடித்த மற்றுமொரு நடிகரான டிஎம்.கார்த்தி அஜித்தை பற்றி சில சுவராஸ்யமான தகவலை தெரிவித்தார் .இவர் பல படங்களில் துணை நடிகராக காமெடி நடிகராக வலம் வந்தவர்.
நண்பன் படத்தில் கதாநாயகிக்கு ஃபியான்ஸியாக வருவார். இவர் தான் ‘அஜித் வாழ்க்கைத் தத்துவங்களை நிறைய பகிருவார். படம், நாடகங்களை பற்றி நிறைய பேசுவார். வாழ்க்கையில் நிறைய கஷ்டப்பட்டு வந்தவர் ஆதலால் பட்ட வலிகளை கூறுவார். அவர்கிட்ட பேசினால் ஒரு போதி மரத்தடியில் உட்கார்ந்த ஒரு உணர்வு தான் வரும்’ என்று கூறினார். மேலும் கூறிய செய்திதான் கொஞ்சம் யோசிக்க வைத்தது. படப்பிடிப்பில் இருக்கும் போதே கார்த்தியின் தந்தை இறந்ததனால் அவர் பாதியிலேயே கிளம்பி போய்விட்டாராம். விபரம் அறிந்த அஜித் கார்த்தியுடன் தொலைபேசியில் அழைத்து ‘ நான் கேள்விப்பட்டேன். சூட்டிங் இல்லையென்றால் நேரிலேயே வந்திருப்பேன்’ என்று கூறினாராம். இது தான் கொஞ்சம் ஓவராக இருந்தது. எதுக்க போகாத மனுஷன்?
கோலிவுட்டில் முக்கிய…
Idli kadai:…
தனுஷ் இயக்கத்தில்…
Nayanthara: கடந்த…
TVK Vijay:…