Categories: Cinema News latest news

ஷங்கர் படத்தை அஜித் தவிர்த்தது ஏன்.?! பின்னணியில் இவளோ பெரிய கதை இருக்கா.?!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் படத்தில் நடிக்க பல்வேறு நடிகர்கள் போட்டி போட்டு வருவார்கள் .  அப்படி ஒரு வாய்ப்பு வந்தும் ஒரு நடிகர் அதனை தவிர்த்து விட்டார் என்று கூறினால் அது நம்ப முடிகிறதா அப்படி ஒரு சம்பவம் நடந்ததாம்.

ஆம், பிரமாண்ட இயக்குனர் இந்தியன் எனும் மாபெரும் வெற்றி படத்தை தொடர்ந்து இயக்கிய இன்னோர் மெகா ஹிட் திரைப்படம் தான் ஜீன்ஸ்.  இந்த படத்தில் நடிக்க முதலில் பேசப்பட்ட நடிகர் அஜித். அதன் பிறகு சில காரணங்களால் அவர் நடிக்கவில்லை.

அதன் பிறகு வெளியான எந்த ஷங்கர் படத்திலும், அஜித் பேசப்படவில்லை. அதனால் ஜீன்ஸ் படத்தில் என்ன நடந்தது என தெரியவில்லை. ஏனென்று தற்போது சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார்.

அதாவது, ஷங்கர் தனது படத்தை எப்படி பிரமாண்டமாக தயாரிக்கிறாரோ அதே அளவு படத்தை விளம்பர படுத்தவும் செய்வார். ஏனென்றால் அப்படி விளம்பரப்படுத்தினால் தான் அந்த பெரிய பட்ஜெட்டை ஈடு செய்ய முடியும். ஆனால், இதற்கு அப்படியே எதிர்மாறானவர் அஜித்.

இதையும் படியுங்களேன் – இயக்குனர் செய்த வேலையால் இனி இந்த பக்கமே வரமாட்டேன் என ஓட்டம் பிடித்த பாலிவுட் நடிகை.!

Ajith Mankatha New Photos Stills

தன் பட விழாக்களில் அஜித் கலந்துகொள்ள மாட்டார். படம் நன்றாக இருந்தால் கண்டிப்பாக ரசிகர்கள் வந்து பார்க்க போகிறார்கள். படம் நன்றாக இல்லை என்றால் ரசிகர்கள் வரப்போவதில்லை என கூறிவிடுவாராம். இதில் கருத்துவேறுபாடு வந்ததால் தான் ஷங்கர் – அஜித் மீண்டும் சேரவே இல்லை என அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Manikandan
Published by
Manikandan