Categories: Cinema News latest news

இதனாலதான் கேப்டன் ‘தூ’ன்னு துப்பினார்.. விஜயகாந்த் வீட்டிற்கு வரும் அஜித்!. இவரே சொல்லிட்டாரு..

Actor Ajith: விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் அஜித் மொத்தப் படப்பிடிப்பையும் அஜர்பைஜானில்தான் நடத்துவதால் முழுவதுமாக படப்பிடிப்பை முடித்துக்கொண்டுதான் இந்தியா திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்தப் படம் ஆரம்பித்ததே மிகவும் தாமதமாகத்தான். அதனால் ஏப்ரலில் எப்படியாவது படத்தை ரிலீஸ் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

ஒரு நாளைக்கு விடாமல் 14 மணி நேரம் சூட்டிங்கில் இருக்கிறாராம் அஜித். அதன் காரணமாகவேதான் மகள் பிறந்த நாளின் போது கூட ஒட்டுமொத்த குடும்பத்தையும் துபாய்க்கு வரவழைத்து பிறந்த நாளை கொண்டாடினார் அஜித். அந்தளவுக்கு முழு மூச்சுடன் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார்.

இதையும் படிங்க: ஷாலுமாதான் என் உலகம்! வேற எதுவும் இல்லடா.. வைரலாகும் அஜித் – ஷாலினியின் புகைப்படம்

இதனால்தான் விஜயகாந்த் மறைவிற்கு கூட அஜித்தால் வரமுடியவில்லை. ஆனால் உண்மைத்தன்மை என்னவென்று தெரியாமல் அஜித்தை பற்றி பல விமர்சனங்கள் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றன. அதுவும் விஜயகாந்த் வீட்டிற்கு வந்து நேரில் தன் இரங்கலை தெரிவிக்க அஜித் நள்ளிரவில் நேரம் கேட்டதாகவும் அதற்கு விஜயகாந்த் குடும்பத்தார் மறுத்ததாகவும் செய்திகள் வெளியாகின.

ஆனால் அதெல்லாம் சுத்தப் பொய் என மீசை ராஜேந்திரன் கூறினார். மேலும் அவர் கூறியதாவது: அஜித் சாரை பொறுத்தவரைக்கும் கேப்டன் இறந்த சமயத்தில் வெளி நாட்டிற்கு ஃபிளைட்டில் சென்று கொண்டிருந்தார். இன்னும் இந்தியா திரும்பவில்லை. நான் கேள்விப்பட்ட வரைக்கும் இந்தியா திரும்பியதும் கண்டிப்பாக கேப்டன் நினைவிடத்திற்கு அஜித் வர இருக்கிறார். அண்ணியாரையும் சந்திக்க இருக்கிறார்.

இதையும் படிங்க: புரடெக்‌ஷன் சாப்பாட்டில் இப்படி ஒரு விபரீதம் நடந்ததா? அஜித் செய்த முதல் வேலை என்ன தெரியுமா?

அதுமட்டுமில்லாமல் கேப்டனுக்கு அஜித் சாரை மிகவும் பிடிக்கும். அஜித் சார் மீது எந்த வருத்தமும் இல்லாதவர் கேப்டன். அந்த நள்ளிரவில் நேரம் கேட்டது எல்லாம் ஊடகங்களில் பரப்பப்பட்ட பொய்யான செய்தி. தயவு செய்து அந்த மாதிரியான பொய்யான செய்தியை பரப்பாதீர்கள். இப்படி செய்யப் போய்தான் அன்றே கேப்டன் பத்திரிக்கையாளர்களை பார்த்து தூ என துப்பினார். அதுவும் ஒரு சில பத்திரிக்கையாளர்களை சொல்கிறேன் என மீசை ராஜேந்திரன் கூறினார்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini