Categories: Cinema News latest news

ஏகே 62 இயக்குனர் மாற்றம்… விக்னேஷ் சிவனால் முடியாத காரியம்?? திடீரென டிவிஸ்டு வைத்த படக்குழு…

அஜித்குமார் நடித்த “துணிவு” திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு விஜய்யின் “வாரிசு” திரைப்படத்துடன் மோதியது. பல வருடங்களுக்குப் பிறகு அஜித்-விஜய் திரைப்படங்கள் ஒரே நாளில் மோதியதால் ரசிகர்கள் மிகவும் ஆரவாரத்தோடு இத்திரைப்படங்களை வரவேற்றனர்.

Varisu VS Thunivu

இதில் “வாரிசு” திரைப்படத்திற்கு அதிகமான நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தன. எனினும் அத்திரைப்படம் பேமிலி ஆடியன்ஸை கவர்ந்திருந்தது. மேலும் “துணிவு” திரைப்படம் ஓரளவு நல்ல வரவேற்பையே பெற்றிருந்தது.

“வாரிசு” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இதில் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத் ஆகியோர் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Thalapathy 67

அதே போல் “துணிவு” திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமார் விக்னேஷ் சிவனுடன் இணையவுள்ளதாக செய்திகள் தெரிவித்தன. ஆனால் தற்போது யாரும் எதிர்பார்த்திராத ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

Vignesh Shivan

அதாவது “ஏகே 62” திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவில்லையாம். அஜித்தை வைத்து “பில்லா”, “ஆரம்பம்” ஆகிய திரைப்படங்களை இயக்கிய விஷ்ணு வர்தன்தான் இயக்கப்போகிறாராம்.

இதையும் படிங்க: இன்சுரன்ஸ் கம்பெனியில் வேலை பார்த்தவரை வசனகர்த்தாவாக ஆக்கிய ஸ்ரீதர்… அதுக்காக அவர் பண்ண விஷயம்தான் ஹைலைட்டே!!

AK 62

விக்னேஷ் சிவன் இன்னும் முழுமையாக திரைக்கதையை எழுதிமுடிக்கவில்லையாம். மிகவும் தாமதப்படுத்திக்கொண்டே வருகிறாராம். அதுவும் இல்லாமல் “வாரிசு”-“துணிவு” போன்ற திரைப்படங்கள் ஒரே நாளில் மோதியது போல், “தளபதி 67” திரைப்படத்துக்கு போட்டியாக “ஏகே 62” திரைப்படத்தை மோத வைக்க தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்துள்ளதாம். ஆனால் விக்னேஷ் சிவன் பணிகளை முடிக்க தாமதமாக்கி வருவதால் இந்த வாய்ப்பு விஷ்ணு வர்தனுக்குப் போய்விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Arun Prasad
Published by
Arun Prasad