×

தினமும் மாட்டு கோமியம் குடிக்கும் அக்ஷய் குமார்!

 பியர் க்ரில்ஸ் நிகழ்ச்சியில் யானையின் கழிவுநீர் குடித்தது குறித்து நடிகர் அக்ஷய் குமார் பேட்டி

 

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் அஃக்ஷ்ய் குமார் அண்மையில் டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இன் டு தி வைல்ட் வித் பியர் க்ரில்ஸ்’ நிகழ்ச்சியில் பியர் க்ரில்ஸ் உடன் கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் பயணித்தனர்.

அப்போது யானைக் கழிவில் உருவாக்கப்பட்ட தேநீரை பியர் க்ரில்ஸ் கொடுக்க அதை அக்‌ஷய்குமார் அருந்தினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி பேசப்பட்டது. அந்த அனுபவத்தை குறித்து பேட்டி ஒன்றில் கூறிய அவர், "ஆயுர்வேத காரணங்களுக்காக நான் தினமும் பசுவின் சிறுநீரைக் குடிக்கிறேன். எனவே யானைக் கழிவில் உருவாக்கப்பட்ட தேநீரைக் குடித்தது எனக்கு பரவாயில்லை” என்றார்.

From around the web

Trending Videos

Tamilnadu News