Connect with us

latest news

ஒருநாள் தங்க இத்தனை லட்சம் செலவு செய்யும் அமீர் – பாவனி!.. ஆனால், வீடியோவில் ஏன் பிச்சைக் கேட்டாரு?..

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்ற அமீர் மற்றும் பாவனி சமீபத்தில் புதிதாக கார் ஒன்றை வாங்கிய புகைப்படங்கள் வைரலாகின. மேலும், வெளிநாட்டில் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் தங்கும் போது எடுத்த வீடியோவை ஷேர் செய்திருந்தனர்.

அதில், அமீர் அந்த ஹோட்டல் பில்லை குறை சொல்வது போல தாங்கள் எத்தனை லட்சத்தை தண்ணி போல ஒரு நாள் செலவு செய்கிறோம் என கெத்துக் காட்டியிருந்தார்.

இதையும் படிங்க: இவங்க விஷால் அண்ணியா?.. இல்லை வவ்வாலா தெரியலையே!.. இப்படி தலைகீழ தொங்கி தாறுமாறு பண்றாங்களே!..

அதை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் பக்கம் முழுக்கவே அமீர் மற்றும் பாவனியை கழுவி ஊற்றியிருந்தனர். அதற்கு காரணமே சமீபத்தில், அமீர் உதவி கேட்டுப் போட்ட ஒரு வீடியோ தான் என்கின்றனர்.

பல திரைப்படங்கள், சீரியல்களில் நடித்த பாவனி தனது முதல் கணவர் தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்துக் கொள்ள நினைத்து கடைசியாக அந்த திருமணமும் நின்று விட்ட நிலையில், வாழ்க்கையில் ஒரு சேஞ்ச் வேண்டும் என நினைத்து பிக் பாஸ் வீட்டுக்கு சென்றார்.

அங்கே ஆரம்பத்தில் அபிநய் பாவனியுடன் நெருங்கி பழகி வந்தார். அதன் பின்னர் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்த அமீர் பாவனியை துரத்தி துரத்தி தொல்லைக் கொடுத்து ஒரு வழியாக பிரியங்காவின் உதவியுடன் கரெக்ட் செய்து விட்டார்.

இதையும் படிங்க: அஜித் மாதிரியே விஜயையும் மாத்திட்டாங்க! இனிமேல் அவ்ளோதான் – கப்பலையே கவுத்திப்புட்ட கேப்டன்

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் காதல் டிராமா முடிந்து விடும் என நினைத்த ரசிகர்களுக்கு இவர்களது காதல் உண்மையான காதல் என்றும் தொடர்ந்து ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் வாழ்க்கையை நடத்தி வருவதாக கூறினர்.

சமீபத்தில், வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற இடத்தில் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் ஒரு நாள் தங்கவே 2 லட்சம் ரூபாயை செலவு செய்து வருவதாக அமீர் அந்த வீடியோவில் கூறியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சமீபத்தில், புதிதாக கார் எல்லாம் வாங்கிய புகைப்படங்களை வெளியிட்டு இருந்தனர்.

இதையும் படிங்க: இழுத்து மூடினா சோழி முடிஞ்சிடும்!. தாரளாமா காட்டி தவிக்க விட்ட பிரியங்கா மோகன்!..

ஆனால், சில நாட்களுக்கு முன்னதாக இரண்டு மாணவர்களின் படிப்பு செலவுக்கு பணம் கேட்டு அமீர் போட்ட வீடியோவை பார்த்த ரசிகர்கள் பாவம் இவரிடம் பணமே இல்லை போல என நினைத்து சிலர் உதவி செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், ஆடம்பர செலவு செய்து வரும் அமீர் ஏன் இரு மாணவர்களின் கல்விச் செலவுக்காக பொதுவெளியில் பிச்சை எடுத்தார் என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

கேபிஒய் பாலா யாரிடமும் பணம் வாங்காமல் முடிந்த வரை தான் உழைத்துச் சம்பாதிக்கும் பணத்தில் ஆம்புலன்ஸ், நலிவடைந்த நடிகர்களுக்கு உதவி என செய்து வருகிறார். அவரை போல இல்லை என்றாலும் ஓரளவுக்கு அடுத்தவர் காசுக்கு ஆசைப்படாமல் அமீர் இருந்தாலே போதும் என நெட்டிசன்கள் அட்வைஸ் செய்து வருகின்றனர்.

author avatar
Saranya M
Continue Reading

More in latest news

To Top