Connect with us

Cinema News

வசந்தபாலனிடம் கடுப்படித்த அங்காடித் தெரு நடிகர்… அதை சாதகமாக பயன்படுத்தி சாதித்த ஆச்சரியம்!

Vasantha Balan: இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் உருவான அங்காடித் தெரு திரைப்படத்தில் ஒரு கேரக்டரை தன்னுடைய ஆரம்பகாலங்களிலே முடிவெடுத்து விட்டாராம். அதற்கு உண்டான காரணம் தான் கசிந்துள்ள நிலையில் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.

ஐங்கரன் இண்டர்நேஷனல் தயாரிப்பில் உருவான திரைப்படம் அங்காடித் தெரு. இப்படத்தினை எழுதி இயக்கி இருந்தார் வசந்தபாலன். இப்படத்தில் புதுமுக நடிகர்களுடன் அஞ்சலி, ப்ளாக் பாண்டி, வெங்கடேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ் குமார் ஆகியோர் இப்படத்துக்கு இசையமைத்து இருந்தார்கள்.

இதையும் படிங்க: கட் பனியனில் கண்டதையும் காட்டும் சீரியல் நடிகை!.. இதுக்கு மேல தாங்காது செல்லம்!..

இப்படத்தில் அஞ்சலி, மகேஷ் கேரக்டர்கள் பேசப்பட்டது. அதேவேலையில், படத்தில் ப்ளோர் மேனேஜர் கருங்காலியாக நடித்த வெங்கடேஷ் கேரக்டரும் பெரிய அளவில் ரீச்சை பெற்றது. உண்மையாக அவர் நடிப்பில் பலரும் ரியலாக அவர் மேல் கடும் கோபம் கொண்டனர்.

இப்படத்துக்கு அவரை தேர்ந்தெடுத்தது பல வருடங்களுக்கு முன்னாடியே நடந்து விட்டதாம். எரிந்து எரிந்து விழும் சூப்பர்வைஸர் கேரக்டரில் ஏ.வெங்கடேஷ் ஜென்டில்மேன் டைமில் இயக்குநர் ஷங்கரிடம் அசோசியேட்டாக இருந்தார். அந்த நேரத்தில் உதவி இயக்குநரான இருந்த வசந்தபாலனிடம் கடுமையாக நடந்து கொள்வாராம். அந்த கேரக்டர் அப்படியே மனதில் பதிந்துபோகவே, அவரை அங்காடித் தெரு கருங்காலியாக்கியிருக்கிறார் வசந்தபாலன்.

இதையும் படிங்க: குடும்பத்தையே அலறவிட்ட விஜயா… எம்மா இந்த வயசுல இதெல்லாம் தேவையா?

Continue Reading

More in Cinema News

To Top