Connect with us

Gossips

என்ன பெரிய விக்ரம்.. அனிருத்.? ‘அந்த’ சம்பவத்தை யுவன் எப்போவோ செஞ்சிட்டார்.! ஆதாரம் இதோ..

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. தயாரிப்பாளர் கமலஹாசனுக்கு மிகப்பெரிய லாபத்தை விக்ரம் கொடுத்து வருகிறது. இதன் காரணமாக படக்குழுவினருக்கு பரிசுகளை வாரி வழங்கி வந்த வருகிறார் உலகநாயகன் கமல்ஹாசன்.

அதிரடியான கதைக்களம் கொண்டு அற்புதமாக படத்தை இயக்கியிருந்தார் லோகேஷ் கனகராஜ். அதனை மேலும் மெருகூட்டும் விதமாக இசையமைப்பாளர் அனிருத் தெறிக்கும் பின்னணி இசையை கொடுத்து இருந்தார். அது ரசிகர்களை கொண்டாடவைத்தது.

அதில் குறிப்பாக கமல்ஹாசன் ஓர் விலைமாது வீட்டிற்கு செல்வார். அந்த காட்சியின் விலைமாது கதாப்பாத்திரத்தின்  நடித்திருந்த அந்த பெண் ஒரு விதமாக முனகுவது போலவும் அந்த சத்தத்தை சேர்த்து பின்னணி இசையை செய்திருப்பார் இசையமைப்பாளர் அனிருத். அந்த இசை இளைஞர்கள் மத்தியில் மிகவும் பரவலாக பேசப்பட்டது.

இதையும் படியுங்களேன் – சிம்புவை கிழித்து தொங்கவிட்ட சினிமா பிரபலம்.! இவரு 100 கோடி வசூல்னு சொன்னாதான் வருவாராம்..

இதனை பார்த்த யுவன் சங்கர் ராஜா ரசிகர்கள், இந்த விஷயத்தை எப்போதோ யுவன் சங்கர் ராஜா பிரியாணி திரைப்படத்தில் செய்து முடித்துவிட்டார். பிரியாணி படத்தில் வரும் மிசஸிப்பி எனும் பாடலின் இடையில் அதேபோல முனகல் சத்தம் வரும் அதோடு இசையும் சேர்ந்து வரும் என அந்த வீடியோ பதிவை குறிப்பிட்டு பகிர்ந்து விட்டனர்.

எது எப்படியோ இரண்டு பாடல்களும், இசையும் இளைஞர்களை குதூகல படுத்தியது என்பதே உண்மை. யார் முதலில் கொடுத்தால் என்ன? பாடல்கள் ரசிகர்கள் ரசிக்கும் படி அமைந்தால் மட்டும் போதும் என்கிறது சினிமா வட்டாரம்.

author avatar
Manikandan
Continue Reading

More in Gossips

To Top