சிம்புவை கிழித்து தொங்கவிட்ட சினிமா பிரபலம்.! இவரு 100 கோடி வசூல்னு சொன்னாதான் வருவாராம்..

0
443

சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அவருக்கு அமைந்தது. அவருக்கு சிறந்த கம்பேக் திரைப்படமாகவும் அது அமைந்தது. இந்த திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு அருமையான இசையை கொடுத்திருந்தார்.

சாதாரண அரசியல் கதைக்களம் என்றாலும், அதனை டைம் லூப் எனப்படும் ஒரு புது கான்சப்டை வைத்து அற்புதமாக இயக்கியிருந்தார் வெங்கட்பிரபு. இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடைந்தது. அண்மையில் தான் இந்த திரைப்படத்தின் வசூல் நிலவரத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டு இருந்தார்.

maandau-01

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் வெற்றி அடைந்த போது படக்குழுவினர் வெற்றி விழா கொண்டாடினர். அந்த விழாவிற்கு சிம்பு வரவில்லை. அதற்கு என்ன காரணம் என்று அப்போது சரியாக தகவல் தெரியவில்லை.

இந்த சம்பவம் குறித்து அண்மையில் பிரபல சினிமா பைனான்சியர் திருப்பூர் சுப்பிரமணியன் ஒரு தகவலை கூறியுள்ளார். அதாவது சிம்பு விழாவிற்கு வரவில்லை என்பது குறித்து சுரேஷ் காமாட்சியிடம் திருப்பூர் சுப்பிரமணியம் கேட்டாராம்.

இதையும் படியுங்களேன் – தேவர் மகனில் பாதி பங்கு இவருடையது.! கலைஞர் முன்னால் கமல் பாராட்டிய அந்த நபர் யார் தெரியுமா.?!

அதற்கு  சுரேஷ் காமாட்சி, ‘ ஹீரோ படத்தின் வசூல் 100 கோடி என கூற சொல்லுகிறார். அப்போதுதான் விழாவிற்கு வருவேன் என கூறுகிறார். அந்த சமயம் படம் 75 கோடி  வரை மட்டுமே வசூல் செய்து இருந்தது. அதனால்தான் பொய் கூற முடியாது என்று கூறிவிட்டேன். இதன் காரணமாகத்தான் சிம்பு பாராட்டு விழாவிற்கு வர மறுத்துவிட்டார்.’ என்று அவர் கூறினாராம். இந்த தகவலை திருப்பூர் சுப்பிரமணியம் ஒரு நேர்காணலில் தெரிவித்து விட்டார்.

சில நாட்களுக்கு முன்னர் தான் மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி டிவிட்டர் பக்கத்தில் மாநாடு படத்தின் மொத்த வசூல் 117 கோடி என அறிவித்து இருந்தார்.

google news