×

கணவருடன் கொண்டாடும் முதல் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்த அனிதா!

பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வரும் அனிதா சம்பத் ஹீரோயின் ரேஞ்சிற்கு ரசிகர்கள் பட்டாளம் வைத்திருப்பவர். விஜய்யின் சர்க்கார் உள்ளிட்ட சில படங்களில் செய்தி வாசிப்பாளினியாகவும் நடித்துள்ளார்.

 

தான் வேலை பார்த்துவந்த தொலைக்காட்சியிலேயே கிராபிக் டிசைனர் ஒருவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னரும் அவர்களின் ரசிகர்கள் கூட்டம் இன்னும் கூடிக்கொண்டே தான் போகிறது.

இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு கணவருடன் முதல் பிறந்தநாளை கொண்டாடும் அனிதாவிற்கு அவரது கணவர் அழகிய சர்ப்ரைஸ் கொடுத்து மனைவியை மகிழ்வித்தார். அம்மா, பெரியம்மா ,பெரியப்பா , கணவர் என உறவினர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடிய இந்த வீடியோ இணையத்தில் வெளியாக அனிதாவிற்கு அனைவரும் வாழ்த்துக்கூறி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News