Categories: latest news throwback stories

நடிகைக்கு மரியாதை இல்ல.. அதுக்குதான் எல்லாம்… ஷூட்டிங்கில் அனுஷ்காவிற்கு நடந்தது என்ன?

கில்லி படத்தின் தெலுங்கு ஒரிஜினல் படமான ஒக்கடு பட இயக்குநர் ராஜசேகர், தக்காணத்தை ஆட்சி செய்த காகதீய வம்ச அரசியான ருத்ரம்மா தேவியின் கதையை அடிப்படையாக அதே பெயரில் படமாக எடுத்தார். கதை நாயகியாக அனுஷ்கா நடித்திருந்த இந்தப் படத்தில் அல்லு அர்ஜூன், ராணா, பிரகாஷ் ராஜ், கேத்தரின் தெரசா, சுமன், நித்யா மேனன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

திரைக்கதை எழுதி முடித்ததும் ருத்ரம்மா தேவி கேரக்டரில் நடிக்க நயன்தாரா, பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோரை அணுகியிருக்கிறார் இயக்குநர் ராஜசேகர். ஆனால், அருந்ததி படத்தின் மிகப்பெரிய வெற்றியை அடுத்து அனுஷ்கா அந்த கேரக்டரில் நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்திருக்கிறார் இயக்குநர் ராஜசேகர்.

இதையும் படிங்க: இதெல்லாம் ஒரு காமெடியா?!.. எஸ்.கே. படத்தை கலாய்த்த உதயநிதி!. ஆனா நடந்ததே வேற!…

அதேபோல், இளையராஜாவை இசையமைப்பாளராகவும் தோட்டாதரணியை கலை இயக்குநராகவும் வைத்து படத்தை எடுத்தார். ஆரம்பத்தில் அல்லு அர்ஜூன் கேரக்டரில் மகேஷ் பாபு மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. 2013-ல் தெலங்கானாவின் வாராங்கல்லில் உள்ள ஆயிரம் தூண் ருத்ரேஸ்வரசாமி கோயிலில் ஷூட்டிங்கைத் தொடங்கியிருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் நடந்த ஷூட்டிங் 2014 ஜூலையில் நிறைவுபெற்று, 2015 அக்டோபரில் படம் ரிலீஸானது. பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல வசூல் படைத்ததோடு, அனுஷ்கா, அல்லு அர்ஜூன் ஆகியோருக்கு விருதுகளையும் வென்றுகொடுத்தது ருத்ரம்மா தேவி படம். இளையராஜா இசையில் படத்தின் இசை வெளியீட்டு விழா ஆந்திர, தெலங்கானா முதலமைச்சர்கள் கலந்துகொள்ள தனித்தனியாக நடத்தப்பட்டது.

`ருத்ரம்மா தேவி’ படத்தில் அனுஷ்கா அணிந்திருந்த பழங்காலத்து டிசைன் நகைகள் எல்லாமே அசல் தங்கத்தில் செய்யப்பட்டதாம். பழைய காலத்து நகைகளை பிரத்யேகமாக ஆர்டர் செய்து வாங்கினார்களாம். இதனாலேயே, ஷூட்டிங் ஸ்பாட்டில் அனுஷ்காவைச் சுற்றி பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம் இருந்ததாம்.

இதையும் படிங்க: நீ நடிக்கலாம் வேண்டாம்… ஆனா இதை மட்டும் செஞ்சிருப்பா.. பிரபுவிடம் ஆசையாக கேட்ட சிவாஜி!..

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily