Connect with us

Cinema History

நீ நடிக்கலாம் வேண்டாம்… ஆனா இதை மட்டும் செஞ்சிருப்பா.. பிரபுவிடம் ஆசையாக கேட்ட சிவாஜி!..

நடிகர் திலகம் சிவாஜியின் இளைய மகனான பிரபு, பெங்களூரில் உள்ள பிரபலமான பிஷப் காட்டன் பாய்ஸ் பள்ளியில் பயின்றவர். சினிமா வாசனையே வேண்டாம் என்று நினைத்ததாலேயே அவரை தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா கொண்டு சென்று பள்ளியில் சேர்த்திருந்தார் சிவாஜி கணேசன்.

இதையும் படிங்க: உன்ன பாத்து பாத்து ஏங்கி போறோம்!.. டைட் பனியனில் சூடேத்தும் ஜெயிலர் பட நடிகை!..

படித்து முடித்ததும் சென்னை திரும்பிய பிரபு சித்தப்பா வி.சி.சண்முகத்தோடு இணைந்து சிவாஜி புரடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். சினிமா தயாரிப்பு நுணுக்கங்களை அண்ணன் மகன் தெளிவாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வி.சி.சண்முகம் நினைத்து, அவருக்குக் கற்றுக்கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்.

ஆரம்பத்தில் நடிகர்களுக்கு சேர்களை எடுத்துப்போடுவது தொடங்கி கேமரா வேலை, எடிட்டிங், கதை விவாதம் என பல்வேறு விஷயங்களையும் பிரபு ஆர்வமாகக் கற்றுக்கொண்டார். அந்த நேரத்தில் படத்தில் நடிக்க வேண்டும் என்கிற எந்த எண்ணமும் அவருக்கு இருந்ததில்லை. குறிப்பாக சிவாஜியின் 200-வது படமான திரிசூலம் படத்தில் தயாரிப்பு நிர்வாகியாக பிரபு பல்வேறு பணிகளைச் செய்திருக்கிறார்.

அந்த சமயத்தில்தான் சங்கிலி படத்தில் நடிக்கும் வாய்ப்பு எதிர்பாராமல் வந்திருக்கிறது. தொடக்கத்தில் பிரபு நடிப்பதில் சிவாஜி கணேசனுக்கு விருப்பம் இல்லையாம். ஆனால், சங்கிலி ரிலீஸ் சமயத்தில் பிரபு ஒரே நேரத்தில் 6 படங்களில் நடிக்கும் அளவுக்கு பிஸியான நடிகராக மாறியிருந்தார்.

அதுவும் கங்கை அமரனின் கோழி கூவுது படம் அவரை வெற்றிகரமான ஹீரோவாக்கியது சிவாஜி கணேசன், தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டார். தனது மகன் பிரபு ஒலிம்பிக்ஸில் விளையாடி இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கவேண்டும் என்ற கனவும் ஆசையும் நடிகர் சிவாஜிக்கு இருந்திருக்கிறது.

இதையும் படிங்க: இதெல்லாம் ஒரு காமெடியா?!.. எஸ்.கே. படத்தை கலாய்த்த உதயநிதி!. ஆனா நடந்ததே வேற!…

ஆனால், அவர் நடிகராகி தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கிவிட்டார். உடல் எடை சற்றே அதிகமாக இருந்தாலும் பிரபு, கல்லூரி காலத்தில் அத்லெடிக் சாம்பியனாக விளங்கியவர். மேலும் அவர்,கிரிக்கெட், ஹாக்கி, கால்பந்து போட்டிகளில் நிறைய கோப்பைகள் வென்றிருக்கிறார்.

Continue Reading

More in Cinema History

To Top