விஜய் படமா… தெறித்து ஓடிய இயக்குனர்கள்… கடைசில அந்தப் படம் தான் சூப்பர்ஹிட்..!

0
119

விஷ்ணு திரைப்படத்தை தயாரித்தவர் ஆர்.டி.பாஸ்கர். இவர் ஆஸ்கர் மூவீஸ் நிறுவனர். இவரது மகன் பாலாஜி பிரபு தனது திரையுலக அனுபவங்களை இப்படி சொல்கிறார்.

பீஸ்ட் படத்துல ஆடின டான்ஸை விஜய் அப்பவே சிங்கார கண்ணுக்கு மை கொண்டு வா என்ற பாடலில் ஆடி அசத்தினார் விஜய். நாளைய தீர்ப்பு, செந்தூரப்பாண்டி, ரசிகன் என பல சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்தவர் விஜய்.

நான் 93ல காலேஜ் படிக்கும்போது ரசிகன் ரிலீஸானது. அது காலேஜ் பசங்க மத்தியில ரொம்ப ட்ரெண்ட் ஆச்சு. நான் அந்தப் படத்தெ ஏழெட்டு தடவை பார்த்தேன். ஆடியன்ஸோட ரெஸ்பான்ஸ் நல்லாருந்தது. நாம சினிமா பேக்ரவுண்டு தானே. இவரை வச்சிப் படம் எடுத்தா நல்லா இருக்கும்போலன்னு நினைச்சேன்.

Also Read: கட்டையை வைத்து வரலட்சுமியின் மண்டையைப் பொளந்த நடிகர்… எல்லாத்துக்கும் காரணம் அவர்தான…

அதை அப்பா கிட்ட போய் சொன்னேன். அவரை வச்சிப் படம் பண்ணலாம்னு சொன்னதும் சரியா வருமான்னு கேட்டார். ஆமான்னு சொன்னேன். உடனே எஸ்.ஏ.சி. சாருக்கு அப்பா போன் பண்ணினார். உடனே அவர் ரொம்ப சந்தோஷமா ஆகிட்டாரு. நீங்க படம் பார்த்துட்டீங்களான்னு கேட்டாரு. இல்லன்னு சொன்னார் அப்பா. உடனே 10 டிக்கெட் கொடுத்து அனுப்பினாரு. படத்தைப் பார்த்ததும் மறுநாள் அட்வான்ஸா ஒரு லட்சம் கொண்டு போனேன்.

இந்த ரூபாயை எங்கிட்ட கொடுக்காதீங்க. என்னோட பையனுக்கு கொடுங்க. இதுதான் அவருக்கு முதல் அட்வான்ஸ்னு சொன்னாரு. அப்போ அப்பா அவருக்கிட்ட செக்கைக் கொடுத்தாரு. கொடுக்கும்போது சின்னத் தயாரிப்பாளர்களின் சூப்பர் ஸ்டாரா வருவ தம்பின்னு சொன்னாரு.

அப்பா சொன்ன அந்த வார்த்தை இன்னைக்கு ஆயிரம் மடங்கு ஜாஸ்தியா பலிச்சிடுச்சு. இன்னைக்கு அவரு பெரிய ஸ்டார் மட்டுமல்ல. அரசியல் தலைவராகவும் மாறிட்டாரு. எஸ்.ஏ.சி. சாருக்கிட்ட நீங்க டைரக்ட் பண்ணுங்கன்னு சொன்னோம். உடனே ‘இப்ப நிறைய படம் பண்ணிட்டேன். டயர்டா ஆயிடுச்சு. நீங்க பண்ணுங்க’ன்னாரு.

அப்பா சொன்னாரு. ‘இவரு யங் பாயா இருக்காரு. இந்த மாதிரி லவ் சப்ஜெக்ட் எடுத்துப் பழக்கம் இல்ல’ன்னாரு. உடனே வேற டைரக்டரை வச்சி பண்ணலாம்னு முடிவு பண்ணினோம். ஆனா ஏழெட்டு டைரக்டரை போய் பார்த்தும் யாரும் கிடைக்கல. அப்போ விஜய் மீதான விமர்சனங்கள் நிறைய வந்துச்சு. அதனால புதுமுக இயக்குனர்களைத் தான் கேட்டுப் பார்த்தோம்.

Also Read: சிவாஜியைப் பின்னுக்குத் தள்ளவே இந்தப் படங்களில் எல்லாம் நடித்தாரா உலகநாயகன்?

வேற வேற காரணம் சொல்லிட்டுப் போயிட்டாங்க. மறுபடியும் இந்தப் படத்தை ஆரம்பிக்கணும்னா நீங்க தான் பண்ணனும். வேற வழியே இல்லைன்னு எஸ்ஏசி.யிடமே சொன்னோம். ‘நீங்க பண்ணுங்க. உங்க படத்துல நான் எந்த விஷயத்துலயும் தலையிட மாட்டேன். நீங்க பண்ணுங்கன்னு தைரியமா’ன்னு அப்பா சொன்னாரு எஸ்.ஏ.சி. அப்படி உருவானது தான் அந்தப் படம். அப்பவே விஜய் நம்மைப் பற்றி தவறா விமர்சனம் செய்தவர்கள் மத்தியில் முன்னேறிக் காட்டணும்னு வெறியோடு உழைச்சார் விஜய். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

google news