மலையாள நடிகரை கரம் பிடிக்கும் டாடா புகழ் அபர்ணா தாஸ்… சத்தமில்லாமல் முடிச்சிட்டாங்களே!

 
மலையாள நடிகரை கரம் பிடிக்கும் டாடா புகழ் அபர்ணா தாஸ்… சத்தமில்லாமல் முடிச்சிட்டாங்களே!
Aparna: சினிமா நட்சத்திர ஜோடிகள் அவ்வப்போது காதல் திருமணம் செய்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்துவார்கள். தற்போது அந்த லிஸ்ட்டில் இணைந்து இருக்கிறார் நடிகை அபர்ணா தாஸ். நான் பிரகாஷம் என்ற மலையாள படத்தில் அறிமுகமானவர் அபர்ணா தாஸ். அப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. தொடர்ச்சியாக மலையாளத்தில் மனோகரம், தமிழில் விஜயுடன் பீஸ்ட் படத்தில் நடித்தார். நாயகி  வேடம் இல்லை என்றாலும் அவரின் ரோல் ஒரளவு பேசப்பட்டது. இதையும் படிங்க:  லிங்குசாமியை காலி செய்த கமல்!.. கை கொடுப்பாரா கார்த்தி?!.. ஐயோ பாவம் அவரு நிலமை!.. அந்த புகழில் அவருக்கு கவினுடன் டாடா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழில் நாயகியாக நடித்த முதல் திரைப்படமே மிகப்பெரிய அளவில் வைரலானது. அபர்ணா தாஸுக்கு தொடர்ந்து நடிக்கும் வாய்ப்புகளும் கிடைத்தது. மலையாள நடிகரை கரம் பிடிக்கும் டாடா புகழ் அபர்ணா தாஸ்… சத்தமில்லாமல் முடிச்சிட்டாங்களே! இருந்தும் பெரிய வாய்ப்புகளை இதுவரை ஒப்புக்கொள்ளாத அபர்ணா தாஸ் தற்போது காதல் திருமணம் செய்ய இருக்கிறாராம். இவரின் காதலரும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தீபக் பரம்பொருள். இவர் சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட மஞ்சும்மெல் பாய்ஸில் முக்கிய வேடம் ஏற்று இருந்தார். இதையும் படிங்க:  தலைவர் 171 படத்துலயும் சம்பவம் இருக்கு!.. லோகேஷ் கனகராஜ் சீக்ரெட்டை உடைத்த சாண்டி மாஸ்டர்!.. மனோகரம் படத்தில் நடிக்கும் போது இருவரும் இணைந்து நடித்து இருப்பர். இது காதல் திருமணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இருவரின் திருமணம் வரும் ஏப்ரல் 24ந் தேதி வடக்கஞ்சேரியில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. கனவுக்கன்னியான அபர்ணா இத்தனை சீக்கிரம் திருமணத்தில் இணைவது ரசிகர்களுக்கே ஷாக் தான் என்கிறார்கள். மலையாள நடிகரை கரம் பிடிக்கும் டாடா புகழ் அபர்ணா தாஸ்… சத்தமில்லாமல் முடிச்சிட்டாங்களே!

From Around the web