Connect with us

Cinema News

தலைவர் 171 படத்துலயும் சம்பவம் இருக்கு!.. லோகேஷ் கனகராஜ் சீக்ரெட்டை உடைத்த சாண்டி மாஸ்டர்!..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள தலைவர் 1711 வது படத்தின் டைட்டில் அறிவிப்பு வரும் ஏப்ரல் 22-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதற்கு முன்னதாக தலைவர் 171 ஆவது படத்தின் சூடான அப்டேட் ஒன்றை சாண்டி மாஸ்டர் சமீபத்தில் நடைபெற்ற சினிமா விழா ஒன்றில் ஓப்பன் செய்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளி மிகப்பெரிய சாதனையை படைத்தது. அந்த படத்தின் ஓப்பனிங் பாடலான பத்தல பத்தல பாடலுக்கு சாண்டி மாஸ்டர் கோரியோகிராபி செய்திருந்தார்.

இதையும் படிங்க: 5 ஆயிரம் கோடியை இறக்கும் அஜித் படத்தின் தயாரிப்பாளர்!.. பிரம்மண்டமாக உருவாகும் 12 படங்கள்!..

கடந்தாண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் சாண்டி மாஸ்டர் சாக்லேட் காபி வேண்டும் என கேட்கும் சைக்கோவாக நடித்து மிரட்டி இருந்தார். தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் படங்களில் சாண்டி மாஸ்டர் இடம்பெற்று வரும் நிலையில், தலைவர் 171 வது படத்திலும் நடிப்பீங்களா என்கிற கேள்வியை கேபிஒய் பாலா எழுப்பினார். அதற்கு பதில் அளித்த சாண்டி மாஸ்டர் நிச்சயம் பெரிய சம்பவம் இருக்கு எனக் கூறியுள்ளார்.

தலைவர் 171 வது படத்தில் நடிப்பேன் அல்லது கோரியோகிராபி செய்வேன் அது எது என்று இப்போதைக்கு சொல்ல முடியாது. ஆனால், அந்த படத்தில் பெரிய சம்பவம் இருக்கிறது என்பதை மட்டும் சொல்வேன் என சாண்டி மாஸ்டர் கூற அரங்கமே அதிர்ந்து விட்டது.

இதையும் படிங்க: சூர்யாவுடன் இணைந்து ஜோதிகா செய்யும் சூப்பர் விஷயம்!.. ஊரு கண்ணே பட்டுடும்! .. என்னவொரு வெறித்தனம்!..

தனது நடன திறமையால் சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வரும் சாண்டி மாஸ்டர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவருக்கு பல பெரிய படங்களில் நடிக்கவும் ஹீரோவாக நடிக்கவும், பல முன்னணி நடிகர்களுக்கு நடன இயக்குனராக மாறும் வாய்ப்புகளும் கிடைத்தன.

சமீபத்தில், டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவாவுக்கு ஒரு பாடலுக்கு நடன இயக்குனராக சாண்டி மாஸ்டர் மாறியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

google news
Continue Reading

More in Cinema News

To Top