Categories: Cinema News latest news

பிகில் நடிகைதான் அதை பண்ணுவாங்களா!.. பீஸ்ட் நடிகை நானும் பண்ணுவேன்!.. கல்யாண வைபவம் ஸ்டார்ட்!..

மலையாள நடிகையான அபர்ணா தாஸ் தமிழில் நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்த பீஸ்ட் படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படம் அவருக்கு பெரிய வரவேற்பை கொடுக்கவில்லை என்றாலும் கவினுக்கு ஜோடியாக டாடா படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தது.

கடந்த ஆண்டு கவின் நடிப்பில் வெளியான டாடா படத்தில் அபர்ணா தாஸ் நடித்ததைப் பார்த்த ரசிகர்கள் கோலிவுட்டில் இவர் மிகப்பெரிய நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதெல்லாம் தனக்கு தேவையில்லை என அதிரடியாக திருமணம் செய்ய முடிவு செய்துவிட்டார்.

இதையும் படிங்க: குடிச்சிட்டு தாலியை கழட்டி எறிந்த மிருணாளினி ரவி!.. வீடியோவை பார்க்கும் போதே பகீர்னு ஆகுதே!..

விஜய், நயன்தாரா நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான பிகில் படத்தில் பாண்டியம்மா கதாபாத்திரத்தில் நடித்த இந்திரஜா சங்கர் கடந்த மார்ச் மாதம் பிரம்மாண்டமாக தமிழ் திருமணத்தை நடத்தினார்.

ரோபோ சங்கரின் மகளான இந்திரஜா சங்கர் திருமணத்துக்கு முன்பாக நடைபெற்ற ஹல்தி ஃபங்க்‌ஷன் நடைபெற்ற நிலையில், வட இந்திய கலாச்சாரத்தை தமிழர்கள் மத்தியில் திணிக்க பார்க்கின்றனர் என கடுமையான விமர்சனங்கள் கிளம்பின. நலங்கு வைப்பதை தான் ஹல்தி என கொண்டாடி வருவதாக அவர்கள் விளக்கம் அளித்தனர்.

இதையும் படிங்க: நண்பர்களிடம் ரஜினிகாந்த் விட்ட ரீல்… எப்படி சிக்கினார் தெரியுமா?

பிகில் பட நடிகையை இந்திரஜா சங்கர் ஹல்தியை தொடர்ந்து பீஸ்ட் பட நடிகை அபர்ணா தாஸ் ஹல்தி கொண்டாடிய காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. பாவாடை தாவணியை கட்டிக் கொண்டு அபர்ணா தாஸ் செம அழகாக இருக்கும் போது அவர் மீது தண்ணீர் அடித்தும், மஞ்சளை கரைத்து ஊற்றியும் அட்டகாசம் செய்த வீடியோவும் வெளியாகி இருக்கிறது.

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என அபர்ணா தாஸின் ஹல்தி கொண்டாட்டம் நடைபெற்றது. மஞ்சுமெல் பாய்ஸ் நடிகர் தீபக் பரம்பொல் என்பவரை நாளை ஏப்ரல் 24ம் தேதி திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்யுங்க..

https://www.instagram.com/p/C6Evb9toZxg/

Saranya M
Published by
Saranya M