Categories: Cinema News latest news

நான் சினிமாவுக்கு தகுதியே இல்லாதவன்.! மேடையில் உளறிய முருகதாஸ்.!

தீனா, ரமணா, கஜினி, 7ஆம் அறிவு, கத்தி, துப்பாக்கி என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த AR முருகதாஸ், அதற்கடுத்ததாக சர்கார், தர்பார் போன்ற படங்களை கொடுத்ததால், மீண்டும் பழைய நிலைக்கு வா முருகதாஸ் போராடி வருகிறார் என்றே கூற வேண்டும்.

இடையில், சர்கார் பட கதை விவகாரம் என சென்றதால் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் முருகதாஸ். அப்போது எழுத்தாளர் சங்கத்தில் கே.பாக்கியராஜ் தலைவராக இருந்தார். அதன் பின்னர், கே.பாக்கியராஜ் இயக்குனர் சங்கத்தில் அண்மையில் போட்டிப்போட்டார். அதற்கு எதிராணியாக RK செல்வமணி போட்டியிட்டார்.

அதில் செல்வமணி ஜெயித்துவிட்டார். அதற்கான விழா நடைப்பெற்றது. அதில் பேசிய முருகதாஸ், ‘ நான் இந்த தேர்தல் முடிவுக்காக காத்திருந்தேன். செல்வமணி வெற்றி என்றவுடன் தான் எனக்கு நிம்மதியாக இருந்தது. எனக்கு ஒரு பிரச்சனை வந்தது. அப்போது நான் செல்வமணி சாருக்கு போன் செய்து, எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

இதையும் படியுங்களேன் – சிவகார்த்திகேயன் ஏன் பெரிய இயக்குனர்களை தவிர்க்கிறார்.?! செம பிளான் SK.!

நான் சினிமாவை விட்டு விலகிவிடலாம் என இருகுகிறேன், நான் சினிமாவுக்கு தகுதியில்லாதவன் என  என கூறினாராம். அதற்கு செல்வமணி, ‘ இது நூலகமோ, தோட்டமோ அல்ல வந்து பார்த்து படித்துவிட்டு போவதற்கு. இது போர்க்களம் இப்படித்தான் இருக்கும் என கூறினாராம். இதனை முருகதாஸ் மேடையில் தெரிவித்தார்.

Manikandan
Published by
Manikandan