Connect with us
nisha

Cinema News

சின்னத்திரையின் நயன்தாரா பில்டப்பை சுக்கு நூறாக உடைத்த ரஜினி! வருத்தத்தில் அறந்தாங்கி நிஷா

விஜய் டிவியில் ஒரு சாதாரண ஸ்டேண்டப் காமெடியனாக அறிமுகமானவர் அறந்தாங்கி நிஷா. அதனால் கிடைத்த அந்த பெருமை தொடர்ந்து விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விஜய் டிவியின் சொத்தாகவே மாறியிருக்கிறார் அறந்தாங்கி நிஷா.

அதுமட்டுமில்லாமல் சின்னத்திரை நயன்தாரா நான் தான் என பெருமையாக வேற சொல்லிக் கொண்டு வருகிறார். மேலும் பல படங்களில் இப்போது அறந்தாங்கி நிஷாவை அதிகமாகவே காணமுடிகிறது.

இதையும் படிங்க : வாயே திறக்காத ஜனனி! அப்செட்டில் இருந்த ரசிகர்களுக்கு செம ட்ரீட் வைத்த ‘எதிர்நீச்சல்’ சீரியல்

நகைச்சுவை நடிகையாக அல்லது குணச்சித்திர நடிகையாக அல்லது சப்போர்ட்டிங் ஆக்டராக பல படங்களில் நடித்து வருகிறார். இவரின் காமெடி சென்ஸ் அனைவரையும் ஈர்த்துள்ளது. எந்தளவுக்கு இறங்கி நடிக்க முடியுமோ காமெடி பண்ண முடியுமோ அந்தளவுக்கு இறங்கி அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் நேற்று வெளியான ஜெய்லர் திரைப்படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் அறந்தாங்கி நிஷா நடித்திருக்கிறார். இந்த கதாபாத்திரத்தில் நிஷாதான் சரியாக இருப்பார் என கமிட் செய்திருக்கிறார். ஆனால் அதுவரைக்கும் ரஜினியுடன் தான் காட்சி என நிஷாவுக்கு தெரியாதாம்.

ஒரு பெரிய டையலாக் பேப்பரை கொடுத்து படிக்க சொல்லியிருக்கின்றனர். அதன் பிறகு தான் ரஜினியிடம் தான் இந்த டையலாக்கை பேச வேண்டும் என தெரிந்ததாம். ரஜினியுடனா என மிகவும் பயந்து விட்டாராம். இருந்தாலும் டையலாக்கை எல்லாம் மனப்பாடம் செய்து ஷார்ட்டுக்கு போய் நின்னாராம்.

இதையும் படிங்க : ஜெயலலிதாவுக்கு முதல் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது எப்படி தெரியுமா?!.. அட ஆச்சர்யமா இருக்கே!..

கொஞ்ச நேரத்தில் ரஜினி நிஷா முன் நிற்க மனப்பாடம் செய்த டையலாக் எல்லாம் மறந்து போய்விட்டதாம் நிஷாவுக்கு. உடனே என்ன பேசுவதென்று தெரியாமல் வணக்கம் சார் என நிஷா சொல்ல பதிலுக்கு சிம்பிளாக வணக்கம் தெரிவித்தாராம் ரஜினி.

அவ்ளோதானாம். உடனே நிஷாவுக்கு ‘ஒரு வேளை சார் வீட்டில் விஜய் டிவி ஓடாதோ, நம்மல இதுவரைக்கும் டிவில பாக்கலயோ, நம்ம திறமையெல்லாம் தெரியாதோ’ என நினைத்துக் கொண்டிருந்தாராம். அதன் பிறகு அந்த நீண்ட டையலாக்கை பேசி முடித்ததும் உடனே பக்கத்தில் இருந்த ரஜினி நிஷாவை கட்டி அணைத்து நல்லா சொன்னடா என மனதார பாராட்டினாராம்.

இதுவே போதும். இதுக்கு மேல என்ன வேண்டும் என நிஷா ரஜினியை பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருந்தார்.

 

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top