Categories: Bigg Boss latest news television

எனக்கு 19 கோடி ஓட்டு வர இதான் காரணம்!… நான் பிஆர்லாம் வைக்கல… நச்சென பதில் சொன்ன அர்ச்சனா!…

Archana: தமிழ் பிக்பாஸின் முதல் வைல்ட் கார்ட் வின்னராகி இருக்கிறார் அர்ச்சனா ரவிசந்திரன். போட்டி எல்லாம் முடிந்து பெரிய பிரேக் எடுத்து திரும்பி இருக்கும் அவர் கொடுத்த முதல் பேட்டியில் சில சர்ச்சைகளுக்கு பதில் கொடுத்து இருக்கிறார்.

அவர் பேட்டியில் இருந்து, நான் 19 கோடி ஓட்டு பிஆர் மூலமாக வாங்கியதாக சொல்லிட்டு இருக்காங்க. ஒரு ஓட்டுக்கு ஒரு ரூபாய்னு வச்சிக்கிட்டா கூட 19 கோடி செலவு ஆகுமே? சரி ஒரு கோடி ஓட்டை சொல்லுங்க. அதுக்கு கூட 1 கோடி ஆகும். நான் ஏன் அவ்வளவு செலவு செய்யணும்.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் இல்லாத அயலான்2? ஆனா அவரு தான் ஹீரோ… என்னங்க இப்படிலாம் யோசிக்கிறாங்க?

சின்ன பட்ஜெட்டில் ஒரு படம் எடுத்து அதில் ஹீரோயினாக நடித்துவிட மாட்டேனா? நான் அந்த பிஆர் மூலமா ஜெயிக்கலை. பப்ளிக் ரெஸ்பான்ஸ் என்னும் பிஆர் மூலமாக தான் வென்றேன். எனக்கு ஒவ்வொரு எலிமினேஷனில் இருக்கும் போது நான் போகணும் என்ற ஆசையே அதிகமாக இருந்தது. அதிலும் பைனல் வாரம் மிகவும் உயிர் பயத்தினையே காட்டியது.

எப்போடா வெளியேறுவோம் என்ற நிலையில் இருந்தேன். அதனால் தான் எனக்கு இவ்வளவு பெரிய பிரேக் தேவைப்பட்டது. முதலில் எனக்கும் பிரதீப்புக்குமே சண்டை வந்தது. ஆனால் அதன் பின்னர் வந்த வாரங்களில் அவர் எனக்கு டிரெஸ் அயர்ன் பண்ணி தந்தார். அவர் எனக்கு பிடித்த போட்டியாளர் தான். மாயாவை கணிக்கவே முடியாது. அவங்க ஒரு மாயை என்றார்.

இதையும் படிங்க: அந்த படம் தான் முக்கியம்!.. கமலால் தள்ளிப்போன ஹெச்.வினோத் திரைப்படம்!…

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily