அந்த படம் தான் முக்கியம்!.. கமலால் தள்ளிப்போன ஹெச்.வினோத் திரைப்படம்!...

Kamalhassan: துணிவு என்ற ஹிட் படத்தினை கொடுத்த ஹெச்.வினோத் ஒருவருடம் கடந்தும் எந்த படத்தினையும் முடிக்காமலே இருக்கிறார். அதற்கு காரணம் கமல் என்பதே தற்போது கோலிவுட்டின் ஷாக் செய்தியாகி இருக்கிறது.

அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என வரிசையாக நல்ல வரவேற்பு படங்களையே கொடுத்து வந்தார். அவரின் வளர்ச்சியை பார்த்த கமலின் தன்னுடைய படத்தினை இயக்க அவரை ஒப்பந்தம் செய்தார்.

இதையும் படிங்க: நண்பர்களுக்காக ரஜினி தயாரித்து நடித்த படம்!… இப்படி ஒரு தங்க மனசுக்காரரா ரஜினி?!..

படத்தின் முதற்கட்ட பணிகளும் நடந்தது. அப்படத்தினை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க இருந்தது. ஆனால் ஹெச்.வினோத் சொன்ன கதை கமலுக்கு பிடிக்கவில்லை என்பதால் அவர் வினோத்துக்கு நோ சொல்லிவிட்டதாக ஒரு தகவல்கள் இணையத்தில் உலா வருகிறது.

ஆனால் அதற்கு தற்போது வேறு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது. கமல், மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் மற்றும் வினோத் படத்தினை ஒரே நேரத்தில் நடிக்கலாம் என்ற ஐடியாவில் தான் இருந்தாராம். ஆனால் தக் லைஃப் படத்தின் கெட்டப் அதற்கு முட்டுக்கட்டையாகி விட்டதாம்.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் இல்லாத அயலான்2? ஆனா அவரு தான் ஹீரோ… என்னங்க இப்படிலாம் யோசிக்கிறாங்க?

இதனால் தான் ஹெச்.வினோத் படத்தினை அவரால் தற்போது நடிக்க முடியாத நிலை இருக்கிறதாம். அதனால் தக் லைஃபை முடித்து விட்டு வரும்வரை வெயிட் செய்ய சொல்லி இருப்பதாக கமல் தரப்பில் இருந்து வரும் தகவல் தெரிவிக்கிறது. அன்பறிவு படத்தில் நடிக்கும் சமயத்தில் ஹெச்.வினோத் படத்தினையும் முடிக்கலாம் என்றும் முடிவு செய்து இருக்கிறாராம்.

இந்த கேப்பில் ஹெச்.வினோத் யோகி பாபு மற்றும் விஜய் சேதுபதியை வைத்து இயக்க இருந்த படத்தினை தள்ளி வைத்து தனுஷை வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறாராம். இப்படத்தினை லலித்தின் செவன் ஸ்கீரின் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles
Next Story

COPYRIGHT 2024

Powered By Blinkcms
Share it