Categories: Cinema News latest news throwback stories

என்னை ஒருத்தன் அசிங்கப்படுத்தினான்.. தேடிட்டு இருக்கேன். காண்டு தீராத விஜய் சேதுபதி…

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் விஜய் சேதுபதி. சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அறிமுகமானபோது இருந்த நடிப்பை விட பல மடங்கு தனது நடிப்பை மேம்படுத்தி உள்ளார் விஜய் சேதுபதி. அதிலும் வில்லனாக அவரது நடிப்பு மிகவும் சிறப்பாக உள்ளதால் தொடர்ந்து வில்லனாக நடிக்கவும் வாய்ப்புகளை பெற்று வருகிறார்..

முதலில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் சுந்தரபாண்டியன் மாதிரியான சில படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகுதான் அவருக்கு கதாநாயகனாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. பிறகு வெளிவந்த பீட்சா திரைப்படம் அவரது வாழ்க்கையின் முக்கிய படமாக அமைந்தது.

விஜய் சேதுபதிக்கு நேர்ந்த அவமானம்:

அதனை தொடர்ந்து மக்கள் மத்தியில் வரவேற்பையும் பெறத் துவங்கினார் விஜய் சேதுபதி. கதாநாயகன் ஆவதற்கு முன்பு பல வருடங்கள் சினிமாவில் வாய்ப்புக்காக போராடி வந்தார் விஜய் சேதுபதி. பல அவமானங்களை பெற்றார்.

vijay sethupathi

அதில் ஒரு முறை ஒரு படப்பிடிப்பில் ஜூனியர் ஆர்டிஸ்டாக அவர் பணி புரிந்து கொண்டிருந்தபோது அங்கு பணிபுரிந்த கேமிரா மேனிற்க்கும் விஜய் சேதுபதிக்கும் பிரச்சனையானது. அதனால் அந்த கேமிரா மேன் மிகவும் அவதூறாக விஜய் சேதுபதியை பேசினார். மேலும் நீ என்ன கதாநாயகனாக போகிறாயா என்று கூறி அவரை கிண்டலும் செய்துள்ளார்.

அதன் பிறகு விஜய் சேதுபதி பெரிய கதாநாயகனாக ஆகிவிட்டார். ஆனால் அந்த கேமரா மேன் யார் என்பது விஜய் சேதுபதிக்கு இன்றும் தெரியவில்லையாம். அந்த கேமரா மேனை இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறாராம் விஜய் சேதுபதி.

இதையும் படிங்க: என் அப்பாவ பத்தி பேச அவருக்கு என்ன அருகதை இருக்கு? நான் வேஸ்ட்டா? ஆவேசமாக பேசிய ராதாரவி

 

Published by
Rajkumar