Connect with us
arjun

Cinema News

என்ன ஒரு எளிமை! குல தெய்வ வழிபாட்டை முடித்த அர்ஜூன் மகள் மற்றும் மருமகன்.. வைரலாகும் வீடியோ

Aishwarya Umapathy:தமிழ் சினிமாவில் ஒரு பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் அர்ஜுன். இவருடைய மகள் ஐஸ்வர்யா மற்றும் தம்பி ராமையா அவரின் மகன் உமாபதி இவர்கள் இருவருக்கும் கடந்த பத்தாம் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்கள் திருமணம் சென்னையில் அர்ஜுனுக்கு சொந்தமான அனுமன் கோயிலில் மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.

திருமணம் முடிந்த சில நாட்களில் வரவேற்பும் நடைபெற்றது. அந்த வரவேற்பு விழாவில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். இவர்களின் திருமண புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை மிகவும் கவர்ந்தன. இந்த நிகழ்வில் உமாபதிக்கும் ஐஸ்வர்யாவுக்கும் இடையேயான ஒரு அழகான பிணைப்பை நாம் பார்க்க முடிந்தது.

இதையும் படிங்க: 2வது பாட்டும் வியூஸ் தேறலயே!.. தங்கச்சி செண்டிமெண்ட் வொர்க் ஆகலயே!.. அப்செட்டில் வெங்கட்பிரபு!.

அது மட்டும் அல்லாமல் திருமணம் முடிந்த கையோடு பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடந்தது. அதில் அர்ஜுன் மற்றும் தம்பி ராமையாவும் அவரவர் அனுபவத்தை பத்திரிக்கையாளர் முன்பு பகிர்ந்தனர். அதில் தன் மகள் உமாபதியை காதலிக்கிறாள் என நான் கொஞ்சம் கூட நினைக்கவில்லை என மிகவும் மகிழ்ச்சியோடு தெரிவித்து இருந்தார் அர்ஜுன்.

இந்த நிலையில் இன்று அவர்கள் சம்பந்தப்பட்ட ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. அதில் தம்பி ராமையாவின் பூர்வீக கோயிலில் அவர்கள் இருவரும் சிறப்பு வழிபாடு செய்து இருக்கின்றனர். அப்போது உமாபதி ஐஸ்வர்யா இருவரும் எளிமையான முறையில் வந்து கோயிலில் சாமி கும்பிட்டு அங்கிருக்கும் பள்ளிகளுக்கும் சென்று மாணவ மாணவியர்களுக்கு தேவையான உதவிகளை செய்து இருக்கின்றனர். அந்த வீடியோ தான் இப்போது வைரலாகி வருகின்றது.

இதையும் படிங்க: ‘தசாவதாரம்’ சாதனையை முறியடித்த ‘இந்தியன் 2’ – கமலுக்கு எத்தனை கெட்டப் தெரியுமா?!..

இன்னொரு பக்கம்  நடிகர் அர்ஜூன் தன் மகள் திருமணம் முடியும் வரை காத்திருந்தார். ஏனெனில் விடாமுயற்சி படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் அர்ஜூன் நடிப்பதால் திருமணம் முடிந்ததும் வந்து கலந்து கொள்கிறேன் என்று கூறியிருந்தார். இதனால் வரும் ஜூலை 2 ஆம் தேதியில் இருந்து அர்ஜூன் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்.

இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/reel/C8owLmvoiN9/?igsh=c3QyempxYXpheDlj

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top