Categories: Cinema News latest news Trailer

யாரவது பேசுங்கயா.! வீடியோவை ரிலீஸ் செய்து ரசிகர்களை காண்டாக்கிய சிவகார்த்திகேயன் – அருண் விஜய்.!

தமிழ் சினிமாவில் பரபரக்கும் ஆக்சன் காட்சிகள், செண்டிமெண்ட், காமெடி என  கமர்சியல் அம்சங்களை ரசிகர்களுக்கு பிடிக்கும் வண்ணம் கலந்துகட்டி கொடுத்து ரசிக்க வைத்தவர் இயக்குனர் ஹரி.

இவர், ஐயா, சாமி, ஆறு, வேல் , சிங்கம் என பல கமர்சியல் மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் ஹரி கடைசியாக சாமி படத்தின் இரண்டாம் பாகம் எடுத்து இருந்தார் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்ப தற்போது அருண் விஜயுடன் கை கோர்த்து யானை பலத்துடன் வரும் ஜூன் 17ஆம் தேதி களமிறங்க உள்ளார்.

ஹரி இயக்கத்தில், அருண் விஜய், பிரியா பவானிசங்கர் நடிப்பில் உருவாகியுள்ள யானை படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் அதனை சிவகார்த்திகேயன் ரிலீஸ் செய்வார் என கூறி ரசிகர்கள் ஒரு மணிநேரத்துக்கு அதிகமாக காத்திருந்தது தான் மிச்சம்.

இதையும் படியுங்களேன் –  அந்த கிரிக்கெட் வீரரின் உள்ளாடை போஸ் சூப்பர்.! டிவிட்டரில் சூடாகிய கஸ்தூரி.!

இறுதியில் 7.20 க்கு வெளியானது. ஆனால் அதனை பார்த்த ரசிகர்களுக்கு ஒரே சந்தேகம் தான் ஏதேனும் டெக்கனிக்கல் பிரச்சனையா யார் பேசுவதும் கேட்கவில்லை, பின்னணி சோக இசை  மட்டும் வருகிறதே என்று, இறுதியில் அருண் விஜய் பன்ச் டயலாக் பேசிய பிறகு தான் டெக்னிக்கல் பிரச்சனை இல்லை ட்ரைலரே அப்படி தான் இருக்கிறது என்று.

இறுதி வரையில் பார்த்த ரசிகர்கள் யாராவது பேசுங்கபா  என கமெண்ட் அடிக்க ஆரம்பித்து விட்டனர். நல்ல வேலை இறுதியில் அருண் விஜய் பேசிவிட்டார். படத்தின் ட்ரைலர் ரசிகர்களை ஈர்த்ததா என்பதை நாளை ட்ரைலருக்கு வந்துள்ள பார்வையாளர்கள் எண்ணிக்கை, லைக்குகளை வைத்து கணக்கிட்டு கொள்ளலாம்.

Manikandan
Published by
Manikandan