Categories: Cinema News latest news Review

யானை பிளிறியதா.? பதுங்கியதா.? மாமன் மச்சான் சேர்ந்து என்ன செய்துள்ளனர்.?! டிவிட்டர் விமர்சனம் இதோ…

அருண் விஜய் நடிப்பில் கடைசியாக திரையில் மாபியா திரைப்படம் 2020இல் வெளியானது. ஹரி இயக்கத்தில் கடைசியாக சாமி இரண்டாம் பாகம் வெளியானது. இந்த இரண்டு படங்களுமே சரியாக போகாத காரணத்தால் ஒரு பெரிய ஹிட் கொடுத்து மாமன் – மச்சான் இருவருமே ஹிட்லிஸ்டில் இணைய வேண்டும் என யானை படம் மூலம் இணைந்தனர்.

இந்த படத்தில் அருண் விஜய் ஹீரோ, ப்ரியா பவானிசங்கர் ஹீரோயின், அண்ணனாக சமுத்திரக்கனி, நண்பனாக வழக்கமான காமெடி கதாபாத்திரம் அல்லாமல் யோகி பாபு , தங்கையாக அம்மு அபிராமி, அம்மாவாக ராதிகா என பலமான நடிகர் பட்டாளத்தோடு இயக்குனர் ஹரி யானை படத்தை இயக்கியுள்ளார்.

படத்தின் கதை வழக்கமான ஒன்றுதானாம்.  தனது குடும்பத்திற்கு ஒரு பிரச்சனை அதனை எப்படி ஹீரோ சமாளித்து வெளியில் வந்தார் என்பது தான். இதில்  ஹரி தனது முந்தைய படங்களின் மூலம் நிறைய அனுபவப்பட்டு கதை, திரைக்கதை எழுதி அதில் வெற்றியும் கண்டுள்ளாராம் இயக்குனர் ஹரி.

இதையும் படியுங்களேன் – அடுத்த சூரரை போற்று.. சூர்யா சூப்பர்.. பாராட்டு மழையில் மாதவனின் ராக்கெட்ரி.. டிவிட்டர் விமர்சனம் இதோ…

இசை அசுரன் ஜிவி.பிரகாஷ் எனும் பெயருக்கு ஏற்றபடி , பின்னணி இசையில் பின்னி பெடலெடுத்துள்ளாராம் ஜிவி. ஆக்சன் காட்சிகளில் அருண் விஜய் தடாலடி காட்டியுள்ளாராம். அதே போல செண்டிமெண்ட் காட்சிகளும் அருமையாக வந்துள்ளதாம்

மொத்தத்தில் யானை மாமன் – மச்சான், ஹரி – அருண் விஜய் இருவருமே யானையாக எகிறி அடித்துள்ளனர். கண்டிப்பாக குடும்பத்துடன் பார்க்க கூடிய ஒரு நல்ல கமர்சியல் திரைப்படமாக யானை இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை என்கிறார்கள் டிவிட்டர் இணையதளவாசிகள்.

Manikandan
Published by
Manikandan