அறிந்தும் அறியாமலும், உள்ளம் கேட்குமே படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆர்யா. ஒரு படம் ஹிட் கொடுப்பதும், ஒரு படம் தோல்வியை சந்திப்பதும் என நடிகர் ஆர்யாவின் சினிமா வாழ்க்கையில் பல அப்ஸ் அண்ட் டவுன்ஸ் இருந்து கொண்டே வந்தது. ஆனால் சமீப காலமாக தொடர்ந்து ஆர்யா நடித்த பல படங்கள் தோல்வியை தழுவி வருகின்றன.
ஆர்யாவுக்கு பின்னாடி சினிமாவுக்கு வந்த சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, அசோக் செல்வன், கவின் எல்லாம் சினிமாவில் அடுத்தடுத்த உயரங்களை தொட்டு வருகின்றனர். ஆனால், நல்ல நடிப்புத் திறமை கொண்டுள்ள ஆர்யா நான் கடவுள், அவன் இவன், மகாமுனி, சார்பட்டா பரம்பரை என ஒரு பக்கம் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தினார்.
இதையும் படிங்க: இதுக்கு மேல அசிங்கம் தேவையா?.. லியோவையும் லோகேஷ் கனகராஜையும் இந்த கிழி கிழிச்சிட்டாரே எஸ்.ஏ.சி!..
பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி போன்ற படங்களில் கமர்சியல் ஹீரோவாகவும் கலக்கினார். ஆனால், அதன் பின்னர் அவரது வெற்றியை அவரால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. சார்பட்டா பரம்பரை திரைப்படம் ஓடிடியில் வெளியானது.
அதன் பின்னர் ஆர்யா நடித்த அரண்மனை 3, கேப்டன், வசந்த முல்லை, காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம், சமீபத்தில் ஓடிடியில் வெளியான தி வில்லேஜ் வெப் சீரிஸ் என அனைத்தும் ஃபிளாப் ஆகின. இந்நிலையில், எப்படியாவது ஒரு வெற்றியை கொடுக்க வேண்டும் என நினைத்த ஆர்யா மீண்டும் சந்தானத்தின் உதவியை தற்போது நாடி இருக்கிறார்.
இதையும் படிங்க: ராஜ்கிரணுக்கு இப்படியொரு முகமா?.. ரஜினியையே அந்த விஷயத்தில் வீழ்த்தினாரா?.. பிரபலம் சொன்ன சீக்ரெட்
பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தை மிஞ்சும் அளவுக்கு ஒரு காமெடி படத்தை வடக்குப்பட்டி ராமசாமி படத்தை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கத்தில் ஆர்யா மற்றும் சந்தானம் இருவரும் சேர்ந்து விரைவில் நடிக்கப் போவதாக நேற்று நடந்த இசை வெளியிட்டு விழாவில் சந்தானம் தெரிவித்துள்ளார். அதே போல சந்தானத்தை வைத்து டிடி ரிட்டர்ன்ஸ் 2 படத்தையும் ஆர்யா தயாரித்து லாபம் ஈட்டும் நோக்கில் களமிறங்கி உள்ளார்.
கோலிவுட்டில் முக்கிய…
Idli kadai:…
தனுஷ் இயக்கத்தில்…
Nayanthara: கடந்த…
TVK Vijay:…