இதுக்கு மேல அசிங்கம் தேவையா?.. லியோவையும் லோகேஷ் கனகராஜையும் இந்த கிழி கிழிச்சிட்டாரே எஸ்.ஏ.சி!..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களுடன் வசூல் வேட்டை நடத்தியது. ஜெயிலர் படத்தின் வசூலை லியோ முந்தியதாக தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக 545 கோடி வசூல் என அறிவித்தது.

ஆனால் லியோ படத்தை பார்த்த அனைவருக்கும் முதல் பாதி நன்றாக இருந்தது என்றும் இரண்டாம் பாதி படுமோசம் என்றும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. அதிலும் இரண்டாம் பாதியில் வரும் பிளாஷ்பேக் காட்சிகள் கொஞ்சம் கூட நம்பகத்தன்மை இல்லாத வகையில் உருவாக்கப்பட்டிருப்பதாக பிரச்சனைகள் வெடித்த நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அப்படியே பல்டி அடித்து அது மன்சூர் அலிகான் கதாபாத்திரத்தின் பர்ஷப்ஷன் பிளாஷ்பேக்கே பொய்யான பிளாஷ்பேக் என உலகமகா உருட்டை உருட்டி இருந்தனர்.

இதையும் படிங்க: பெரிய மனுஷன்யா.. வந்த வாய்ப்பை தவற விட்ட விஜய்! மீண்டும் சிம்மாசனம் போட்டு அமர்ந்த ரஜினி

இந்நிலையில், நடிகர் விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது ஒரு படத்தைப் பார்த்தேன் அதன் முதல் பாதையை பார்த்துவிட்டு மிகவும் பிடித்து போனது. அந்த இயக்குனருக்கு போன் செய்து ஒரு படம்னா இப்படித்தான் இருக்கணும் என முதல் பாதி குறித்து பாராட்டினேன் அவரும் ரொம்பவே சந்தோஷப்பட்டார். அதன் பின்னர், இரண்டாம் பாதியில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டினேன். அந்த குறிப்பிட்ட மதத்தில் இது போன்ற மூடநம்பிக்கைகள் இல்லை என்றும் கூறினேன்.

உடனடியாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் சார் பிறகு போன் செய்கிறேன் என வைத்துவிட்டார். இந்த காலத்து இயக்குனர்கள் தாங்கள் எடுப்பதுதான் சரியான படம் என நினைக்கின்றனர். சரியான விமர்சனங்களை கூட காது கொடுத்து கேட்பது கிடையாது. படம் வெளியான பின்னர், நான் சொன்ன அதே விமர்சனத்தை கிட்டத்தட்ட அனைவருமே கூறினர்.

இதையும் படிங்க: ச்சீ.. கருமம்.. ஆசனம் பேரே ஒரு மாதிரி இருக்கே!.. அமலா போல் உட்கார்ந்து இருக்க போஸை பார்த்தீங்களா!..

ஒரு ஹீரோவை காட்டினால் எப்படி காட்ட வேண்டும் எம்ஜிஆர் நடிக்கும் போது அவர் தனிப்பட்ட வாழ்க்கை எப்படி இருந்தாலும் சினிமாவில் தண்ணி அடிக்காத வராக தன்னைக் காட்டுவார். ஆனால் இங்கு ஹீரோ படம் முழுக்க குடித்துக் கொண்டே இருப்பதாக காட்டுகின்றனர் என விஜய்யின் கதாபாத்திரத்தையும் வெளுத்து வாங்கியிருக்கிறார் எஸ்சி சந்திரசேகர்.

 

Related Articles

Next Story