Categories: Cinema News latest news

என் அண்ணன் மட்டும் தான் என்ன வச்சி படம் எடுப்பான்.! தம்பி மேல் பாசம் அதிகம்.!

அமீர் இயக்கத்தில் படம் வெளியாகி வருடங்கள் உருண்டோடி விட்டன. பருத்தி வீரன், மௌனம் பேசியதே, ராம் என தரமான படைப்புகளை தமிழ் சினிமாவிற்கு கொடுத்த அந்த இயக்குனர் அமீரை பல வருடங்களாக காணவில்லை.

தற்போது தான் மீண்டும் அமீர் இயக்கத்தில் படங்கள் என செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. அதில், வெகு நாட்களாக கிடப்பில் இருந்த சந்தனதேவன் திரைப்படம் தூசிதட்டப்பட்டு மீண்டும் உருவாக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதையும் படியுங்களேன் – RRR-ஐ கண்டு தெறித்து ஓடிய சிவகார்த்திகேயன்.! பேருல மட்டும் தான் ‘டான்’.!

ஆர்யா நாயகனாக நடிக்க உள்ள அப்படத்தின் வேலைகளை இயக்குனர் அமீர் கவனித்து வருகிறார். அதே போல, ஆர்யா தம்பியான நடிகர் சத்யா (அமர காவியம் பட ஹீரோ ) புதிதாய் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம். அந்த படத்தையும் அமீர் தான் இயக்குகிறார் என செய்திகள் உலா வருகின்றன.

அது உண்மையா என தெரியவில்லை. ஆனால், அந்த படத்தை ஆர்யா தான் தயாரிக்கிறார் என்பது மட்டும் உண்மை. சத்யா நடித்த படங்கள் பாக்ஸ் ஆபிசில் பெரிதாக சோபிக்கவில்லை என்பதால், வேறு தயாரிப்பாளர்கள் முன்வரவில்லையா? அல்லது தம்பியை நாம் தான் தூக்கிவிட வேண்டும் என ஆர்யா களத்தில் இறங்கிவிட்டாரா என தெரியவில்லை. ஆனால், திரையுலகில் இப்படி ஒரு தயாரிப்பாளர் அண்ணன் கிடைக்க சத்யா கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

Manikandan
Published by
Manikandan