Categories: Cinema News latest news

என்ன அசோக் செல்வன் இப்படி இறங்கிட்டாரு!.. வீட்ல கீர்த்தி பாண்டியன் எதுவும் கேட்க மாட்டாங்களா பாஸ்!..

பா. ரஞ்சித் தயாரிப்பில் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படத்தில் அசோக் செல்வன் சூப்பரான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். ப்ளூ ஸ்டார் திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்க வேண்டிய படம் தான்.  ஆனால், பா. ரஞ்சித் பேனர் என்பதாலயே என்னமோ தெரியவில்லை அந்த படம் சரியாக போகவில்லை என்று கூறுகின்றனர்.

கடந்த ஆண்டு போர் தொழில் படத்தின் மூலம் குறைந்த பட்ஜெட்டில் படத்தை எடுத்து 50 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருந்தார் அசோக் செல்வன். தமிழ் சினிமாவின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வரும் அசோக் செல்வன் தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: ஜெயலலிதா வாழ்க்கையில் யார் யாரோ வந்தார்கள்! பிரிய காரணம் இதுதான்.. தோழி கூறிய ரகசியம்..

வித்தியாசமான படங்களை கொடுத்து வருகிறார் என ரசிகர்கள் அவரை அதிகம் லைக் செய்து வருகின்றனர். இந்நிலையில், திடீரென பாலாஜி கேசவன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்துக்கு “எனக்குத் தொழில் ரொமான்ஸ்” என டைட்டில் வைக்கப்பட்டு போஸ்டரும் வெளியாகி இருக்கிறது.

அவந்திகா மிஷ்ரா எனும் புதுமுக நடிகை இந்த படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், ப்ளூ ஸ்டார் படத்தில் கீர்த்தி பாண்டியன் ஜோடியே நல்லா இருந்ததே மீண்டும் அவருடன் இணைந்து நடிக்கலாமே என்றும் வித்தியாசமான படங்களை விட்டு விட்டு காதல் மன்னனாக மீண்டும் ரொமான்ஸ் ரூட்டில் அசோக் செல்வன் பயணிப்பது நல்லா இருக்கா? என்றும் ஆக்‌ஷன் ஹீரோவாக போர் தொழில் படத்தில் நடித்து விட்டு தற்போது ரொமான்ஸ் தொழிலுக்கு இறங்கிட்டீங்களா என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கழுதை தேஞ்சி கட்டெறும்பு ஆன கதை!.. யோகி பாபுவுக்கு ஜோடியான சிம்பு பட ஹீரோயின்.. யாருன்னு பாருங்க!

Saranya M
Published by
Saranya M