×

நான் காதலிக்கிறேனா?!.. என்னை பத்தி என்னென்னமோ பேசுறாங்க! - ஃபீலிங் காட்டும் அஸ்வின்

 
ashwin

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அஸ்வின் குமார். இவருக்கென ரசிகர் கூட்டமே உருவாகியுள்ளது. இவரையும் ஷிவாங்கியையும் வைத்து இருவரும் காதலிப்பது போல் ஒரு இமேஜை உருவாக்கினார்கள். ஆனால், அதில் உண்மையில்லை என்பது பின்னர்தான் புரிய வந்தது. 

எப்படியும் இவர் சினிமாவில் நடிப்பார் என எதிர்பார்த்தது போலவே அவருக்கு நிறைய சினிமா வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா இயக்கும் புதிய படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்தது. ஆனால், சில காரணங்களால் அஸ்வின் அதில் நடிக்கவில்லை. தற்போது அப்படத்தில் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் நடிக்கவுள்ளார்.

ashwin

சினிமா ஒரு பக்கம் எனில், மறுபக்கம் ஆல்பங்களில் அஸ்வின் நடித்து வருகிறார். பிகில் படத்தில் நடித்த ரெபோ மோனிகா ஜானுடன் அவர் நடித்த ‘குட்டி பட்டாஸ்’ ஆல்பம் வீடியோ யுடியூப்பில் செம ஹிட். தொலைக்காட்சிகளிலும் இந்த பாடல் அடிக்கடி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தற்போது மேலும் சில ஆல்பங்களில் அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் சில முக்கிய தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார். நான் பல வருடங்களாகவே சிங்கிளாகத்தான் இருந்து வருகிறேன். ஆனால், நான் காதலிப்பதாக வதந்திகளை பரப்பி வருகின்றனர். ஒவ்வொருவருக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அதை புரிந்து கொள்வது கடினம். இப்போது நான் சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருறேன்.

ashwin

அதேநேரம் காதல்தான் எல்லாமே. நம் மீது ஒருவர் அன்பு காட்டுவது அழகான விஷயம். என் வாழ்க்கையில் அப்படி ஒரு பெண் வரும் நாளுக்காக காத்திருக்கிறேன். என்னை பற்றி பல வதந்திகள் வெளியானது. எனக்கு திருமணமாகி குழந்தைகள் இருக்கிறார்கள் என்று கூட எழுதினார்கள். அவர்கள் என்னை கேட்டிருக்கலாம்’ என அஸ்வின் கூறினார்.

மேலும், ஒருவரை நம்பும் முன் யோசியுங்கள். நம்பிவிட்டால் முழுதாக நம்புங்கள்’ என அறிவுரையும் கூறினார் அஸ்வின்... 

From around the web

Trending Videos

Tamilnadu News