×

எந்த அறிவுரைகளையும் பின்பற்றவில்லை – மக்கள் மீது அஸ்வின் அதிருப்தி !

கொரோனா வைரஸில் இருந்து தற்காத்துக் கொள்ள சொல்லப்பட்ட அறிவுரைகளை சென்னை மக்கள் பின்பற்றவில்லை என கிரிக்கெட் வீரர் அஸ்வின் டிவிட்டரில் அதிருப்தி அடைந்துள்ளார்.

 

கொரோனா வைரஸில் இருந்து தற்காத்துக் கொள்ள சொல்லப்பட்ட அறிவுரைகளை சென்னை மக்கள் பின்பற்றவில்லை என கிரிக்கெட் வீரர் அஸ்வின் டிவிட்டரில் அதிருப்தி அடைந்துள்ளார்.

கொரோனா வைரஸ் பீதி தற்போது இந்தியாவிலும் அதிகமாக உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் வைரஸ் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 120 ஐ தாண்டியுள்ளது. ஆனால் இதுவரை தமிழகத்தில் கொரோனா வைரஸால் யாரும் பாதிக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது.

ஆனால் தமிழக மக்கள் யாரும் அரசு அறிவுறுத்தியுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியாகக் கடைபிடிக்கவில்லை என தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் ‘மக்கள் கூட்டமாக கூடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டதை சென்னை மக்கள் இன்னமும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லைசென்னையின் கடுமையான வெப்ப நிலையால் கரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கும் என மக்கள் நினைத்திருக்கலாம். அல்லது தங்களை எதுவும் தாக்காது என அவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கலாம்’ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News