வாரணம் ஆயிரம் படத்துல முதல்ல இந்த ஹீரோயின் தான் நடிச்சாங்களா!.. அய்யோ ஏன் மிஸ் ஆகிடுச்சு?..

 
வாரணம் ஆயிரம் படத்துல முதல்ல இந்த ஹீரோயின் தான் நடிச்சாங்களா!.. அய்யோ ஏன் மிஸ் ஆகிடுச்சு?..
கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா, சமீரா ரெட்டி, குத்து ரம்யா உள்ளிட்ட பலர் நடித்த வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் சமீரா ரெட்டிக்கு முன்பாக பிரபல நடிகை ஒருவர் அந்த படத்தில் கமிட்டாகி நடித்த புகைப்படக் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. 2005ம் ஆண்டு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, அசின் மற்றும் நயன்தாரா நடித்த கஜினி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அடுத்த ஆண்டே வாரணம் ஆயிரம் படத்தை சூர்யாவை வைத்து ஆரம்பித்து விட்டார் கெளதம் மேனன். வாரணம் ஆயிரம் படத்துல முதல்ல இந்த ஹீரோயின் தான் நடிச்சாங்களா!.. அய்யோ ஏன் மிஸ் ஆகிடுச்சு?..   இதையும் படிங்க:  ஒன்னா இருந்தோம்! அதுக்கப்புறம் கண்டுக்கவே இல்ல.. அஞ்சலி இப்படிப்பட்டவரா? ஆனால், சில நாட்கள் ஷூட்டிங் நடந்த நிலையில், தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் இடையே ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக வாரணம் ஆயிரம் படம் டேக் ஆஃப் ஆகவில்லையாம். முதலில் அப்பா கதாபாத்திரமே இல்லாமல் தான் அந்த படத்தை சூர்யா மற்றும் அசினை வைத்து காதல் படமாக உருவாக்க நினைத்திருக்கிறார் கெளதம் மேனன். ஆனால், கால தாமதம் ஏற்பட்ட நிலையில், கதையில் பல மாறுதல்களை புகுத்தி வாரணம் ஆயிரம் படத்தை 2008ம் ஆண்டு வெளியிட்டார். ஆனால், நடிகை அசின் அந்த படத்தில் நடிக்க முடியாத சூழல் உருவாகி விட்டது. இதையும் படிங்க:  விஜய் விடாம துரத்தியும் அஜித்த தாண்டலயே!.. லியோவை ஓரங்கட்டிய விஸ்வாசம்!.. அவருக்கு பதிலாக சமீரா ரெட்டியை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருந்தார். சிம்ரன், குத்து ரம்யா என 3 நடிகைகளும் அந்த படத்துக்கு சரியான தேர்வாக இருந்தனர். அசின் நடித்திருந்தால், வேறு ஒரு ஆங்கிளில் படம் வந்திருக்கும்.

From Around the web