விஜய் விடாம துரத்தியும் அஜித்த தாண்டலயே!.. லியோவை ஓரங்கட்டிய விஸ்வாசம்!..

Viswasam: 80களில் ரஜினி - கமல் ஆகியோருக்கு எப்படி போட்டி இருந்ததோ அப்படித்தான் கடந்த பல வருடங்களாக அஜித் - விஜய் போட்டி இருக்கிறது. பல வருடங்களாகவே இவர்கள் இருவரும் திரையுலகில் போட்டி நடிகர்களாக வலம் வருகிறார்கள். இவர்கள் இருவருமே ஒரு கால கட்டத்தில் சினிமாவில் நுழைந்தவர்கள்தான்.

இருவருமே துவக்கத்தில் பெரிய வெற்றிப்படங்களை கொடுக்கவில்லை. அதேபோல் இருவருமே பல வருடங்கள் காதல் படங்களில் நடித்துவிட்டு பின்னர் ஆக்‌ஷன் ரூட்டுக்கு மாறியவர்கள். விஜயின் மார்க்கெட் பலமாக உருவாகியிருந்த நேரம் அஜித்தும் பில்லா, மங்காத்தா போன்ற படங்களில் நடித்து தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.

இதையும் படிங்க: இளையராஜாவின் மகள் பவதாரிணி திடீர் மரணம்!.. அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்…

விஜய்க்கு பலமே அவரின் ரசிகர் மன்றங்கள்தான். ஆனால், அஜித் பல வருடங்களுக்கு முன்பே தனது ரசிகர் மன்றத்தையே கலைத்தவர். ஆனாலும் அவருக்கு ரசிகர்கள் குறையவில்லை. 2023 பொங்கலுக்கு விஜயின் வாரிசு படம் வெளியானபோது தனது துணிவு படத்தை துணிந்து வெளியிட்டார் அஜித். வாரிசை விட துணிவு படம் நல்ல வசூலை பெற்றதாகவும் சொல்லப்படுகிறது.

சினிமாவில் மட்டுமல்ல டிவியிலும் விஜய்க்கு டஃப் கொடுத்து வருகிறார் அஜித். சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடித்து வெளியான படம்தான் விஸ்வாசம். இந்த படம் அப்போது வெளியான ரஜினியின் பேட்ட படத்தையும் விட அதிக வசூலை பெற்றது. இப்போது டிவியிலும் விஸ்வாசம் படம் சாதனையை செய்து வருகிறது.

இதையும் படிங்க: என்னமோ எனக்கு பிடிக்கல!.. ரஜினியுடன் 4 படங்களில் நடித்துவிட்டு பிடிக்காமல் வெளியேறிய நடிகை!..

முதல் முறை விஸ்வாசம் படம் சன் டிவியில் வெளியானபோது 18.14 டி.ஆர்.பி புள்ளியை பெற்றது. 2வது முறை 15.35 புள்ளிகளை பெற்றது. 3வது முறை 16.12 புள்ளிகளை பெற்றது. ஆனால், சமீபத்தில் பொங்கலுக்கு ஒளிபரப்பான லியோ படம் 16.30 டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றிருக்கிறது.

4வது முறை விஸ்வாசம படம் ஒளிபரப்பப்பட்ட போது கிடைத்த டி.ஆர்.பியை விட இது குறைவு என சொல்லப்படுகிறது. அந்தவகையில், இன்னும் விஜயால் அஜித்தை தாண்ட முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இதையும் படிங்க: இவ வயித்துல பொறக்கனும்னு ஆசைப்படுறேன்! நடிகையை பற்றி கண்ணீர் விட்ட மிஷ்கின்

 

Related Articles

Next Story