Connect with us
deva

Cinema News

விஜய், அஜித் ஒருதடவ கூட அத சொன்னதில்லை!.. ரஜினி அதுல கிரேட்… உருகும் தேவா!…

தமிழ் சினிமாவில் இன்று வரை ரஜினியின் பல படங்களுக்கு டைட்டில் கார்டில் ஒலிப்பது இவரது இசையே. ஆம். தேவாவின் இசையில் பாட்ஷா படத்தின் பாடல்கள் ஹிட் அடித்ததில் இருந்து அந்த பிஜிஎம் தான் ரஜினியின் எல்லா படங்களின் டைட்டிலிலும் இசைத்துக் கொண்டிருக்கிறது. ரஜினி மட்டுமில்லாமல் விஜய், அஜித், சத்யராஜ், விஜயகாந்த் என பல முன்னனி நடிகர்களின் படங்களில் தேவா எத்தனையோ ஹிட்களை கொடுத்திருக்கிறார்.

குறிப்பாக விஜய் , அஜித்தின் ஆரம்ப கால படங்களின் வெற்றிக்கு மிக உறுதுணையாக இருந்தது தேவாவின் இசையில் அமைந்த பாடல்கள்தான். ஆசை படத்தில் அமைந்த ‘கொஞ்ச நாள் பொறு தலைவா’ பாடலை யாராலும் மறக்கமுடியாது. காதலர்களை மெய்மறந்து எங்கேயோ கொண்டு போய் நிறுத்திவிடும்.

இதையும் படிங்க : போதும்… போதும்.. ரொம்ப லெங்க்தா போது! ஜெய்லர் வெற்றியால் ஜெட் ஸ்பீடில் ரஜினிகாந்த்!

அதே போல் ஆனந்த பூங்காற்றே படத்திற்கும் தேவாதான் இசை. காதல் கோட்டை படத்தையும் யாராலும் மறக்க முடியாது. இதே போல் விஜயின் பாடல்களான ‘பாரதிக்கு கண்ணம்மா’, ‘ஒரு பொண்ணு ஒன்னு நான் பார்த்தேன்’,  ‘எங்கேங்கே’,  ‘தொட்டபெட்டா ரோட்டுல ஒரு முட்டை பரோட்டா’ போன்ற பல ஹிட் பாடல்களை சொல்லலாம்.

இப்படி விஜய், அஜித்தின் கெரியரில் மறக்க முடியாத பாடல்களை கொடுத்தவர் தேவாதான். இத்தனை ஹிட் பாடல்களை கொடுத்திருந்தாலும் ஒரு முறை கூட இந்த பாடல் மிக சூப்பராக வந்திருக்கிறது என விஜயும் சரி அஜித்தும் சரி தேவாவை பாராட்டியதே இல்லையாம்.

இதையும் படிங்க : எல்லா ஏரியாலையும் ஐயா கில்லி… பழைய பார்முக்கு திரும்பிய ரஜினி… பாட்ஷா இரண்டாம் பாகமா?

மேலும் ரிக்கார்டிங்கிற்கும் அவர்கள் வரமாட்டார்களாம். ஒரு பாடலை கூட குறிப்பிட்டு இதுவரை அவர்கள் இருவருமே தங்கள் பாராட்டை தெரிவித்ததே இல்லையாம். ஆனால் அந்த விஷயத்தில் ரஜினி மட்டும்தான் உடனே தேவாவை தொலைபேசியில் அழைத்து பாடல் கேட்டேன், சூப்பராக இருக்கிறது தேவா என்று  மனதார பாராட்டுவாராம்.

இது நாள் வரைக்கும் ரஜினி மட்டுமே அதை செய்தாராம். அவ்வப்போது சத்யராஜ் போன் செய்து பாராட்டுவாராம். கமல் எப்போதுமே கம்போசிங்கில் தான் இருப்பாராம். ஆனால் விஜய் , அஜித் ஒரு நாள் கூட பாராட்டியதே இல்லை என தேவா ஒரு பேட்டியில் கூறினார்.

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top