Categories: Cinema News latest news

நம்ம அட்லீ செஞ்ச வேலையால் அதிர்ந்து போன பாலிவுட்.! ஷாருக்கானுக்கு இப்போ வேற வழி இல்ல…

பாலிவுட் சினிமாவுக்கு இந்த காலம் என்ன ஆனது என தெரியவில்லை. வருகிற படமெல்லாம் எல்லாம் பிளாப் பிளாப் என்றுதான் வருகிறது. அது பெரிய கான் ஹீரோக்கள் படமாக இருந்தாலும் சரி படம் பிளாப் தான்.

ஆனால் இந்த பாய்காய்ட் கலாச்சாரம் வருவதற்கு முன்பே அடிவாங்கி சினிமாவை விட்டு சிறுது காலம் ஒதுங்கி விட்டார் ஷாருக்கான். சினிமாவுக்கு கேப் விட்ட ஷாருக் இவர் தற்போது அடுதடுத்து  பெரிய பெரிய படங்களில் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்களேன்  – அந்த விஷயத்தை மறைக்காத நயன்தாரா.. குழப்பத்தில் திரையுலகம்.! இதெல்லாம் எங்க போய் முடியப்போகுதோ.?!

இதில் ஜவான் படத்தை நம்ம தமிழ் இயக்குனர் அட்லீ இயக்கி வருகிறார். இதன் ஷூட்டிங் தான் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், என்ன விஷயம் என்றால் தற்போது, ஷூட்டிங் சென்னையில் பிரமாண்ட செட் அமைத்து, நீண்ட ஷெடியூல் ஒன்றை எடுத்து வருகிறார் அட்லீ.

இதையும் படியுங்களேன்  – விக்ரம் பட தழுவலா சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர்.? அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்..

மேலும், மதுரை, திருநெல்வேலி பகுதி துணை நடிகர்களை வைத்து இந்த ஷூட்டிங்கை ஒரு பிரமாண்ட தமிழ் பட ஷூட்டிங் போல நடத்தி வருகிறார் அட்லீ. பொதுவாக பாலிவுட் படமென்றால் வடமாநிலங்களில் தான் எடுப்பார்கள். தென் மாநிலத்தின் பக்கம் அவர்கள் பார்வை விழாது. ஆனால் அட்லீ தற்போது பெருபாலும் இங்கு தான் ஷூட்டிங் செய்து வருகிறார்.

ஷாருக்கானும் இந்த சமயம் எதுவும் சொல்ல முடியாது. படம் ஹிட்டானால் போதும். ஏற்கனவே பாலிவுட் படம் அடிவாங்கி வருவதால்  எதுவும் சொல்வதற்கில்லை என்ற மனநிலையில் தான் ஷாருக் இருப்பார் என சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

Manikandan
Published by
Manikandan