×

சிம்பு படத்தில் அறிமுகமாகவிருந்த நயன்தாரா! - இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே!...

 
சிம்பு படத்தில் அறிமுகமாகவிருந்த நயன்தாரா! - இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே!...

தமிழ் சினிமாவில் ‘ஐயா’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நயன்தாரா. அதன்பின் சிம்புவுடன் காதல், பின்னர் பிரேக்கப், அதன்பின் பிரபுதேவாவுடன் காதல், பிரேக்கப் என தமிழ் சினிமாவில் சர்ச்சைகளில் அதிகம் சிக்கிய நடிகை. ஆனாலும், தனது திறமை மற்றும் அழகால் முன்னணி கதாநாயகியாக மாறி தற்போது லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார். தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். 

இந்நிலையில், சிம்பு நடித்த ‘ தொட்டி ஜெயா’ படத்தில்தான் நயன்தாரா அறிமுகமாக இருந்தது தெரியவந்துள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு இந்த தகவலை ஒரு பிரபல வார இதழில் எழுதும் தொடரில் தெரிவித்துள்ளார். 

ஒரு பத்திரிக்கையில் நயன்தாராவின் புகைப்படத்தை பார்த்தேன். அவரை பற்றி விசாரித்து சென்னை வரவழைத்தேன். என் தயாரிப்பில் சிம்பு நடித்த தொட்டி ஜெயா படத்தில் அவரை நடிக்க வைக்க விரும்பினேன். ஆனால், அப்படத்தின் இயக்குனர் துரை மற்றும் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் ஆகியோருக்கு நயனை பிடிக்கவில்லை. அவர்கள் ஆட்டோகிராப் புகழ் கோபிகாவை நடிக்க வைக்க விரும்பினார்கள்.

டெஸ்ட் ஷூட்டும் நடத்தப்பட்டது. நயன்தாராவுக்கு நடிப்பு சரியாக வரவில்லை என என்னிடம் கூறினர். எனவே, நானும் அவர்களின் முடிவுக்கு விட்டு விட்டேன். நயன்தாராவை என்னால் அறிமுகம் செய்ய முடியாமல் போய்விட்டது என்பதில் எனக்கு இப்போதும் வருத்தம் உண்டு’ என அவர் அதில் தெரிவித்துள்ளார். 

தொட்டி ஜெயா 2005ம் ஆண்டு வெளியானது. அப்படத்திற்கு முன்பே ஹரி இயக்கத்தில் நயன்தாரா ‘ஐயா’ திரைப்படம் மூலம் அறிமுகாகிவிட்டார். ஆனால், அதே நயன்தாரா வல்லவன் திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தபோது அவருடன் காதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

From around the web

Trending Videos

Tamilnadu News