Connect with us

Cinema News

பிரச்னை உங்களை தேட வரலை பாக்கியா… நீங்களே தான் போய் சிக்கிடுறீங்க… மீண்டும் மீண்டுமா?

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் எழில் மற்றும் அமிர்தா கீழே வர காப்பி குடிச்சியா எனக் கேட்கிறார் ஈஸ்வரி. குடிச்சிட்டேன் என்கிறார் எழில். பாக்கியா வந்து அமிர்தா எப்படி இருக்கா எனக் கேட்க ஃபீல் செய்வதாக சொல்கிறார். ஈஸ்வரி அவ எதுக்கு வருத்தப்படணும் என்கிறார்.

கணேஷ் விஷயம் அமிர்தாவுக்கு தெரியும் என்கிறார் பாக்கியா. இதனால் ஈஸ்வரி மீண்டும் கடுப்பாகிறார். எழில் அவங்க அமிர்தாவை அப்பா, அம்மா மாதிரி பாத்துக்கிட்டாங்க. ஒருமுறை பாத்துட்டு வந்துடட்டுமே என்கிறார். போன அவ மட்டும் போகட்டும். நீ அங்க போக வேண்டாம் என்கிறார் ஈஸ்வரி.

இதையும் படிங்க: என்னது விஜயகாந்த் உதவி செய்யலயா? நம்புற மாதிரி சொல்லுங்க – அஜித் வராததற்கு இதுதான் காரணமா

பாக்கியா அப்போ நான் கூட்டிட்டு போகவா எனக் கேட்க எல்லாம் முடிவு நீயே எடுத்துட்ட என்கிறார். கோபி அப்போ எதுவும் பிரச்னை வந்தா நீயா தான் சமாளிக்கணும். எங்களை கூப்பிடக்கூடாது என்கிறார். அமிர்தா, நிலாவை கூட்டிக்கொண்டு கிளம்புகிறார். அப்போ கணேஷின் அம்மா கால் செய்ய வருவதாக சொல்கிறார். 

வீட்டுக்கு வந்து கணேஷின் அப்பா உட்கார்ந்து இருக்க அமிர்தா ஓடி வந்து என்ன ஆச்சு எனக் கேட்கும் போது அங்கு கணேஷ் வந்துவிடுகிறார். வெளியில் சென்றுவிடலாம் என நினைப்பதற்குள் அமிர்தா கழுத்தில் கத்தியை வைத்து நிலாவை வாங்கிக்கொண்டு காரில் கடத்தி சென்றுவிடுகிறார். அவர்களை பின்தொடர்ந்து பாக்கியா ஆட்டோவில் செல்வதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

இதையும் படிங்க: கல்யாணத்துக்கே கூப்பிடல!. ஆனா விஜயகாந்த் செய்த உதவி!.. நெகிழும் ஆர்.வி.உதயகுமார்…

Continue Reading

More in Cinema News

To Top