மாஸ் காட்டும் கோபி… பல்ப் வாங்கும் பாக்கியா… என்னடா நடக்குது இங்க? சரியில்லையே!
Mar 18, 2024, 11:05 IST
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோபியின் கிளவுட் கிச்சனில் அமோகமாக வியாபாரம் நடப்பதை பார்த்து ஆச்சரியப்படுகின்றனர். பின்னர் கோபியின் செஃப்பிடம் பேசிவிட்டு அவர்கள் கிளம்ப சாப்பிட சொல்லி அழைத்து செல்கிறார் கோபி. வீட்டுக்கு வரும் அவர்களை பார்த்து பாக்கியா பேசிக்கொண்டு இருக்கிறார். வியாபாரம் அமோகமாக நடப்படதாக பேசிக்கொண்டு உள்ளனர். பின்னர் ராமமூர்த்தி உன் ரெஸ்டாரெண்ட் எப்படிமா நடக்குது எனக் கேட்க கொஞ்சம் டல்லு தான் எனக் கூறுகிறார். இதனால் ஈஸ்வரி கோபியை தூக்கி வச்சிக்கொண்டு பேசுகிறார். இதையும் படிங்க: கதையா?.. பிரம்மாண்டமா?.. குழம்பியதால் சினிமாவிலிருந்தே காணாமல் போன தயாரிப்பாளர்!.. அட இவரா?!..
அவரிடம் பாக்கியா வீட்டுக்கு சென்று இருப்பதாக கூறுகின்றனர். அவர் சாப்பிட்டுக்கொண்டு இருக்க பாக்கியா அந்த நேரத்தில் சரியாக வந்து தண்ணி ஊத்துகிறார். பின்னர் பேசிக்கொண்டு இருக்கும் போது கோபியின் கிளவுட் கிச்சன் வியாபாரம் நன்றாக நடப்பதாகவும் அதனை ஒப்பிட்டு வீட்டில் பேசிக்கொண்டு இருப்பதாகவும் கூறுகின்றார். பழனிசாமி வீட்டில் எப்போதுமே பிசினஸ் விஷயத்தினை பேசக்கூடாது என்கிறார். பின்னர் கோபி செந்திலை சந்தித்து பேசிக்கொண்டு இருக்கிறார். ரொம்ப சந்தோஷமாக இருப்பதாகவும் கூறுகிறார். அங்கே ஜெனியின் அப்பா ஜோசப் வர அவரிடம் கோபி பேசுகிறார். ஆனால் அவர் திட்டிவிட்டு கத்துகிறார். ஜெனிக்கு டைவர்ஸ் வாங்கியவுடன் இன்னொரு திருமணம் செஞ்சி வைக்க போறேன் எனவும் சொல்லிவிட்டு செல்கிறார். இதனால் கோபி அதிர்ச்சியுடன் நிற்பதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது. இதையும் படிங்க: என்னது!.. சின்னி ஜெயந்த் இவ்வளவு படங்களை இயக்கியுள்ளாரா?!.. அட ஆச்சரியமா இருக்கே!..
பின்னர் செழியன் வீட்டுக்கு கோபி ரெஸ்டாரெண்ட்டின் திறப்பு விழா புகைப்படத்தினை ப்ரேம் போட்டு எடுத்து வருகிறார். அதை பார்த்து ஈஸ்வரி சந்தோஷப்படுகிறார். பின்னர் பாக்கியா பேசிக்கொண்டு ரெஸ்டாரெண்ட் செல்கிறார். பாக்கியா ரெஸ்டாரெண்டுக்கு பழனிசாமி வருகிறார்.
